குழந்தைகள் சாப்பிட்ட உடனே தூங்க வைத்தால் இந்த பிரச்சனை ஏற்படும்..மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள்!

குழந்தைகள் நலத்தில் பெற்றோர்கள் கவனக்குறைவாக இருப்பதால், பல்வேறு பிரச்சனைகள் சிறுவயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், உணவு உண்ட உடனே குழந்தைகளைத் தூங்க வைக்கக்கூடாததற்கான காரணங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.

குழந்தைகளை எப்போதும் ஆற்றலுடன், புத்துணர்வுடனும் வைத்திருப்பது பெற்றோர்களின் முதன்மையான கடமையாகும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளின் உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகளை உணவு உண்ட உடனே தூங்க வைப்பது, அவர்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்த விளக்கங்களை இங்கே பார்ப்போம்.

1 /8

குழந்தைகளின் உணவு பழக்கவழக்கமும் தூக்க முறைகளும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், சாப்பிட்டவுடன் உடனே தூங்குவது தவறாகும்.(sleep immediately after eating?)

2 /8

சாப்பிட்ட உடனே தூங்குவதால் செரிமான செயல்பாடு பாதிக்கப்படும், உணவு சரியாக ஜீரணமாகாது.(Indigestible)  

3 /8

இது வயிற்று வலி, வாயு பிரச்சனை, அமிலத்தன்மை போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.(Doctors say)

4 /8

தொடர்ந்து இந்த பழக்கம் நீடித்தால், குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, மந்தமான செரிமானம் மற்றும் தூக்கக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.(Digestion and sleep disorders)  

5 /8

சாப்பிட்ட பிறகு குறைந்தது 30-45 நிமிடங்கள் நடமாடுவது அல்லது விளையாடுதல் போன்ற செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.(Walk or play for 30-45 minutes)

6 /8

சிறிய வயதில் வந்த இந்த பழக்கம், வளர்ந்த பிறகு பெரிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.(Health problem)

7 /8

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் குழந்தைகளுக்கு வழங்குவது பெற்றோர்களின் முக்கிய கடமை.(The main duty of parents)

8 /8

இனிமேல், குழந்தைகள் சாப்பிட்ட உடனே தூங்க விடாமல், குறைந்தது அரை மணி நேரம் அவர்களைச் செயல்பாட்டுடன் வைத்திருப்பது அவசியம். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.(Keep it functional)