ஆவலுடன் எதிர்பார்த்த டிராகன் படத்தின் ஓடிடி அப்டேட்! எப்போது எந்த தளத்தில் ரிலீஸ் ஆகும்?

Dragon Movie OTT Release Update : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் திரைப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. 

Dragon Movie OTT Release Update : கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகி, பெரிய ஹிட் அடித்த படம், டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடிகளாக கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. இதனை எந்த தளத்தில் எப்போது முதல் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1 /7

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம், டிராகன். இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

2 /7

டிராகன் படத்தின் டிரைலர் வெளியான போது, பலரும் இது இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றுதான் நினைத்தனர். ஆனால் ரிலீஸிற்கு பிறகுதான் தெரிந்தது, இந்த படம் அனைவருக்குமான படம் என்று.

3 /7

டிராகன் படம் 10 நாட்களில், உலகளவில் சுமார் ரூ.100 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம், 150 கோடி வசூலை நெருங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

4 /7

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக வந்த நாயகிகளுள் ஒருவர் கயாடு லோஹர். இவர், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கிறார்.

5 /7

வழக்கமாக எந்த படம் திரையரங்குகளில் வெளியானாலும் அதற்கு சில நாட்களிலேயே அந்த படத்தின் ஓடிடி அப்டேட்டும் வெளியாகிவிடுவது வழக்கம். அந்த வகையில், டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரமும் வெளியாகியிருக்கிறது. 

6 /7

டிராகன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. இந்த தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

7 /7

இந்த படம், வரும் மார்ச் மாதம் 21ஆம் தேதி அல்லது அம்மாதத்தின் இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.