கனவு மூலம் மரணம் முன்கூட்டியே அறியலாம், ஸ்வப்னா சாஸ்திரம் சொல்லும் மரண அறிகுறிகள்
தினமும் இரவில் தூங்கும்போது எல்லோருக்கும் கனவுகள் வரும். அந்த கனவு எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாகவும், ஒரு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கலாம். அதாவது, இதனை நல்ல கனவு, கெட்ட கனவு என சொல்வார்கள். நமக்கு வரும் கனவுகளின் அடிப்படையில் அடுத்து நம் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் என்கிறது சாஸ்திரங்கள்
பண்டைய மத நூல்களில் குறிப்பாக எவையெல்லாம் கெட்ட கனவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கனவுகளைப் பார்த்த பிறகு, ஒரு நபர் மிக விரைவில் நோய்வாய்ப்படலாம் அல்லது விரைவில் இறக்கலாம் என்கின்றன அந்த சாஸ்திரங்கள்.
ஒருவர் தனது கனவில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தெற்கு நோக்கி நகர்வதைக் கண்டால், அவர் விரைவில் இறந்துவிடுவார். புராணங்களில் இலங்கையை ஆண்ட ராவணன் தன்னுடைய கனவில் ஒருநாள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வதுபோல் கனவு கண்டிருக்கிறான். அதன்பிறகே அவனுக்கு கொடூரமான மரணம் ஏற்பட்டிருக்கிறது.
சாஸ்திரங்களின்படி, ஒரு நபர் தனது கனவில் ஒரு பெண்ணின் உடல் கருப்பாகவும், சேலையின் நிறம் சிவப்பு நிறமாகவும் இருந்தால், அந்த கனவு அவருக்கு ஆபத்தானது. ஏனெனில் இந்த வடிவத்தில் அழிக்கும் தெய்வமான காளி இருப்பார். உங்கள் கனவில் இந்த அம்மன் தெற்கு நோக்கி செல்வதைக் கண்டால், விரைவில் கெட்டது நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நபர் ஒரு கனவில் தேன் அல்லது எண்ணெயைக் குடித்தால், அவரும் நீண்ட காலமாக உயிரோடு இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது தவிர, ஒரு துறவி தனது கனவில் தன்னை கட்டிப்பிடிப்பதை ஒருவர் கண்டால், அந்த கனவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
இதைத் தவிர, ஒருவர் தனது உடல் சேற்றால் மூடப்பட்டு அல்லது சதுப்பு நிலத்தில் சிக்கியிருப்பதைக் கண்டால், விரைவில் அவரது வாழ்க்கையில் ஏதோ ஆபத்தானது நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.