ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் Dude! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Dude OTT Release : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடைசியாக வெளியான படம் ட்யூட். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Dude OTT Release : கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், ட்யூட். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனை, எந்த தளத்தில்-எப்படி பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1 /7

கீர்தீஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், ட்யூட். இளசுகளை கவரும் வகையில் இருந்த இந்த படத்தின் கதை, பலருக்கு பிடித்திருந்தது. 

2 /7

கோமாளி, லவ் டுடே, டிராகன் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன், ட்யூட் படத்திலும் தனது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர். இவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.

3 /7

ட்யூட் படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவான விமர்சனமே வந்திருந்தது. சில பழைய தலைமுறையினருக்குதான் இப்படத்தின் கதை செட் ஆகாதது போல இருந்தது.

4 /7

ட்யூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்றிருந்த Dude என்கிற பாடல், “என் மூச்சவ பேச்சவ..” லிரிக்ஸ் பலரையும் கவர்ந்திருந்தது.

5 /7

ட்யூட் படம், சுமார் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்ததாக அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில், அடுத்து இதன் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்த கேள்வியும் எழுந்தது.

6 /7

இப்போதெல்லாம் திரையரங்குகளில் படங்கள் வெளியாகும் முன்பு, டிஜிட்டல் உரிமை பெற்ற பிறகே திரையிடப்படுகின்றனர். அந்த வகையில், ட்யூட் படத்தின் டிஜிட்டல்  உரிமையும் முன்னரே விற்கப்பட்டு விட்டது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

7 /7

ட்யூட் படத்தை வரும் நவ.14ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.