ராகு கேது பெயர்ச்சி 2025: எப்போதும் பின்னோக்கி சுற்றும் கிரகங்களான ராகு கேது வரும் மே மாதத்தில் பெயர்ச்சியாக உள்ளன. இதனால் சில ராசிகளுக்கு பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும் எனவும், இதனால் வாழ்க்கையில் அற்புதமான விடியலை பெறுவார்கள் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படும் ராகு கேது வரும் மே மாதத்தில் பெயர்ச்சி அடைகின்றன. இவை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாத காலத்தை எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாவ கிரகங்கள் அல்லது சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு கேது எப்போதும் வக்கிர நிலையில் தான் நகர்கின்றன. இந்த இரு கிரகங்களின் பெயர்ச்சிகளும், அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகள் இதனால் பெரும் பலன் அடைவார்கள்.
ராகு கேது பெயர்ச்சி வரும் மே மாதம் 18ஆம் தேதி, மாலை 4:30 மணிக்கு ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ள நிலையில், இதனால், வாழ்க்கையில் கோடி நன்மைகளைப் பெற்று, வாழ்க்கையில் நல்ல விடியலை சந்திக்கப் போகும் 5 ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். வேலையில் தொழிலில், எதிர்பார்த்த முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும்.
மிதுன ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி மனதிற்கு தைரியத்தையும் உறுதியையும் கொடுக்கும். இதனால் சதிகளை வென்று, நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும், கூடுதல் வருமானமும் கிடைக்கும். உங்களை வாட்டி வந்த உடல்நலப் பிரச்சினைகள் தீரும்.
கடக ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, பொருளாதார நிலையை உயர்த்தும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
கன்னி ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும். பண வரவு நிதி நிலையை உயர்த்தும். இதனால் கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
துலாம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பண வரவின் மூலம், ஆடம்பர வசதிகளை பெறுவீர்கள். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.