மீனத்தில் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவான்... அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்

சனி பகவான்: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஜோதிடத்தில் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பெயர்ச்சி 2025: ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் சனி பகவானின் பெயர்ச்சி மட்டுமல்ல, அதன் வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.

1 /8

சனி வக்கிர நிவர்த்தி: சனீஸ்வரன், வரும் ஜூலை மாதம் 13ம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் நீடிக்கிறார். இதனால் சில ராசிகள் மிகுந்த பலனை அடைவார்கள் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

2 /8

ரிஷப ராசி: சனியின் வக்ர நிவர்த்தி காரணமாக வேலையில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்க செலவு செய்வீர்கள். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

3 /8

கடக ராசி: வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்திருக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். இது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும்.

4 /8

மகர ராசி: மீனத்தில் சனி பகவானின் வக்ர நிவர்த்தி, காரிய தடைகள் அனைத்தையும் நீக்கி வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். நினைத்த காரியம் கைகூடும்.

5 /8

சனி பெயர்ச்சி 2025: சனிபகவான் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார். சனி பெயர்ச்சியின் அடிப்படையில் தான், ஏழரை நாட்டு சனி காலம், அஷ்டம சனி ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 /8

ஏழரை நாட்டு சனி காலம்: சனி பகவானின் மார்ச் மாத பெயர்ச்சியால், மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும், ரிஷப ராசிக்கு விரய சனி காலமும் தொடங்குகிறது. அந்த வகையில் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி காலம் தொடங்குகிறது.

7 /8

சனி பரிகாரங்கள்: சனியின் கோபப்பார்வையாலும், ஏழரை நாட்டு சனி காலத்திலும் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்வது பலன் தரும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், பிரச்சனையில் இருப்பவர்களுக்கு உதவுவதும் சனிபகவானின் மனதை குளிர்விக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.