Lose Weight With Sabja Seeds: உடல் எடையைக் குறைக்கப் பலரும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆனால் எந்த சிரமமும் இல்லாமல், உங்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். எப்படி என்று கீழே பார்ப்போம்.
Tips To Lose Weight In 2 Months: சப்ஜா விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. உடல் எடை குறைப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுடன் சப்ஜா விதைகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், 2 மாதத்திற்குள் எடையை எளிதாகக் குறைக்கலாம். இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த வழிகளைத் தொடர்ந்து பாருங்கள்.
நீர் மற்றும் சப்ஜா விதைகள்(Water and sabja seeds): சப்ஜா விதைகளை 15-20 நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக் குடித்தால், வயிறு நிறைவாக இருக்கும். மேலும், இது உணவின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை சாறு(Lemon juice): சப்ஜா விதைகளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால், உடலின் டிடாக்ஸிபிகேஷன் மேம்பட்டு, கொழுப்பு எரிக்க உதவுகிறது.
தேன்(Honey): சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊறவைத்து, அதில் தேன் கலந்து குடித்தால், பசி குறைந்து, உடல் எடை விரைவாகக் குறைய உதவுகிறது.
புதினா(Mint): புதினா இலைகளைச் சப்ஜா விதைகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமானம் மேம்பட்டு, உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பு குறையும்.
பழவகைகள்(Fruits): பப்பாளி (Papaya), கிவி, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களுடன் சப்ஜா விதைகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை குறைய அதிக உதவியாக இருக்கும்.
சப்ஜா விதை மற்றும் இஞ்சி(Sabja seeds and ginger): சப்ஜா விதைகளுடன் சிறிய இஞ்சி துண்டுகளைச் சேர்த்துச் சாப்பிடுங்கள். இது கொழுப்பை எரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டை(Cinnamon): இலவங்கப்பட்டை, ஒரு சக்திவாய்ந்த மசாலாப்பொருள். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.