உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் கல்வி, திருமண உதவித் தொகை பெறலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் கல்வி உதவித் தொகை பெறலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு

Tamil Nadu Government : உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் கல்வி, திருமண உதவித் தொகை பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

1 /8

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக உழவர் பாதுகாப்பு அட்டை  வழங்கி வருகிறது. இந்த அட்டை மூலம் திருமணம், கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகை பெற முடியும்.   

2 /8

விவசாயிகளின் நலன்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

3 /8

உழவர் பாதுகாப்பு அட்டை (Uzhavar Pathukappu Card) மூலம் உதவித் தொகை பெறுவது குறித்த அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், உழவர் பாதுகாப்புத்திட்ட அடையாள அட்டை உள்ளவர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் 17.06.2025 அன்று நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

4 /8

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உழவர் பாதுகாப்புத்திட்ட அடையாள அட்டையுடையோர்கள் அவர்தம் சார்பு உறுப்பினர்களின் திருமண உதவித்தொகை, 2025-2026 -ஆம் கல்வியாண்டுக்கான கல்லுாரி கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

5 /8

மூல உறுப்பினர்களுக்கான விபத்து நிவாரணத் தொகை, உறுப்பினர்களின் இறப்பிற்கான ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை விண்ணப்பங்கள், பெறுவதற்கான முகாம் திருநெல்வேலியில் நடக்கிறது.

6 /8

அதேபோல், பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, இராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், திசையன்விளை வட்டத்திலுள்ள அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களின் குடியிருப்பில் வைத்து 17.06.2025 அன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.  

7 /8

இம்முகாமினை உழவர் பாதுகாப்புத்திட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

8 /8

இதேபோல் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்களா என தெரிந்து கொண்டு, வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இந்த தகவலை தேவைப்படுவோருக்கு பகிரவும்.