Kalviyil Sirantha Tamil Nadu : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் நடந்த உணர்ச்சி மிகு தருணங்களை இங்கே பார்க்கலாம்.
Kalviyil Sirantha Tamil Nadu : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆனந்த கண்ணீர் விட்ட தருணங்கள்...
1/8கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் புதுமைப் பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் கூடுதலாக 2.65 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
2/8இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் கல்வித்துறை போட்டுக் கொண்டிருக்கும் பீடுநடை, சமூகநீதிப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்தது. உண்மையில், அரசின் திட்டங்கள் எப்படி சரியானவர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது, அதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
3/8புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவி சுப்புலட்சுமி. இவரை முதலமைச்சர் அன்போடு கணக்கு டீச்சர் கனவு நனவாகும் என அழைத்து பேனாவை பரிசாக கொடுத்து முத்தம் கொடுத்து வாழ்த்தினார். நெகிழ்ச்சியான தருணம்
4/8பின்னர் மாணவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5/8புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெற்ற மாணவி ரம்யா பேசும்போது, "என்னுடைய தாய்க்கு காது கேட்காது. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் மூலம் என்னுடைய காதுகேளாத தாய்க்கு காது கேட்கும் கருவி வாங்கிக் கொடுதேன்." என கூறியபோது அரங்கில் இருந்த மாணவியின் பெற்றோர் கண்ணீர்விட்டனர்
6/8இதனைப் பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் ஆகியோரும் கண்ணீர்விட்டனர். ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அலுவலர்களும் அப்போது அழுதனர். அரங்கை நெகிழ்ச்சியூட்டிய தருணம் இது
7/8பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசின் திட்டங்களால் நம்ம பிள்ளைங்க அடைந்திருக்கும் பலன்களை பார்க்கும்போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது என கூறினார். அவரின் இந்த பேச்சு, கடுமையான போராட்டங்களுக்கு இடையே அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு சரியான பலன் கிடைக்கிறது என்பதை பறைசாற்றியது.
8/8இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், படிப்பு தான் எல்லோரையும் உயர்த்தும் என ஆணித்தரமாக கூறினார். அவரின் பேச்சுக்குப் பிறகு மாணவ, மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.