Test Stats: இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான லியம் டாவ்சன் முதல் தர கிரிக்கெட்டில் 18 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடித்த சதங்களை விட டெஸ்டில் குறைவான சதங்களை அடித்த 10 இந்திய நட்சத்திர பேட்டர்களை இங்கு காணலாம்.
Liam Dawson: 35 வயதான லியம் டாவ்சன் 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் முதல் தர போட்டிகளில் பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களித்துள்ளார். முதல் தர போட்டியில் 341 இன்னிங்ஸில் 18 சதங்கள், 56 அரைசதங்கள் என 10,731 ரன்களை குவித்துள்ளார். அதே நேரத்தில் 371 விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார்.
ரிஷப் பண்ட்: இவர் இந்திய அணிக்காக 81 இன்னிங்ஸில் 8 சதங்களை அடித்திருக்கிறார்.
சுப்மான் கில்: இவர் இந்திய அணிக்காக 65 இன்னிங்ஸில் 8 சதங்களை அடித்திருக்கிறார்.
கௌதம் கம்பீர்: இவர் இந்திய அணிக்காக 104 இன்னிங்ஸில் 9 சதங்களை அடித்திருக்கிறார்.
கேஎல் ராகுல்: இவர் இந்திய அணிக்காக 107 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்திருக்கிறார்.
அஜிங்கயா ரஹானே: இவர் இந்திய அணிக்காக 144 இன்னிங்ஸில் 12 சதங்களை அடித்திருக்கிறார்.
ரோஹித் சர்மா: இவர் இந்திய அணிக்காக 116 இன்னிங்ஸில் 12 சதங்களை அடித்திருக்கிறார்.
குண்டப்பா விஸ்வநாத்: இவர் இந்திய அணிக்காக 155 இன்னிங்ஸில் 14 சதங்களை அடித்திருக்கிறார்.
சௌரவ் கங்குலி: இவர் இந்திய அணிக்காக 188 இன்னிங்ஸில் 16 சதங்களை அடித்திருக்கிறார்.
விவிஎஸ் லஷ்மண்: இவர் இந்திய அணிக்காக 225 இன்னிங்ஸில் 17 சதங்களை அடித்திருக்கிறார்.
திலீப் வெங்சர்கார்: இவர் இந்திய அணிக்காக 185 இன்னிங்ஸில் 17 சதங்களை அடித்திருக்கிறார்.