EPF உறுப்பினர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு

EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு டபுள் குட் நியூஸ் உள்ளது.

EPFO Update: மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000 லிருந்து உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த முடிவு செயல்படுத்தப்படலாம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், ஊதிய உச்சவரம்பையும் ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவற்றை பற்றி இங்கே விரிவாக காணலாம்.

1 /10

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வரும் நாட்களில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றின் மூலம் நிதி நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பல செயல்முறைகளும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /10

மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000 லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த முடிவு செயல்படுத்தப்படலாம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் முதியோர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

3 /10

எனினும், குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என ஒரு தரப்பினரும் கோரி வருகிறார்கள். ஆகையால், வரும் வாரங்களில் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 -இலிருந்து ரூ.3,000 முதல் ரூ.7,500-க்குள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படிகின்றது.

4 /10

ஊழியர் ஓய்வூதிய திட்டமான EPS இன் கீழ் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில், 36.6 லட்சம் ஊழியர்கள் வெறும் ரூ.1,000 -ஐ குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெறுகிறார்கள். இந்த ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட்டால், கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு அது நிவாரணமாக அமையும்.

5 /10

இபிஎஃப் சந்தாதாரர்களின் ஊதிய உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், சுமார் 75 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு, குறிப்பாக முன்னர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியப் பலன்களிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும்.

6 /10

இப்போது, ​​ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான அடிப்படை மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் மட்டுமே கட்டாய EPF மற்றும் EPS கவரேஜுக்குள் வருகிறார்கள். இந்த வரம்பை ரூ.21,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.

7 /10

ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், ஓய்வூதிய பங்களிப்புகள் அதிகமாகும், மேம்பட்ட ஓய்வூதிய பாதுகாப்பு கிடைக்கும், EPF சேமிப்புத்தொகையும் அதிகமாகும். இதன் மூலம் EPS பங்களிப்பு உச்சவரம்பு ரூ.1,250 இலிருந்து ரூ.1,749 ஆக உயரும். இதனால், தகுதியுள்ள ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அதிகரிக்கும்.

8 /10

இப்போது, ரூ.15,000 -க்கு மேல் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் EPS இன் பலன்களைப் பெற முடியாது நிலை உள்ளது. இபிஎஃப்ஓ மற்றும் அரசின் மூலம் வரம்பு நீட்டிக்கப்பட்டால், ரூ. 21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும்.

9 /10

ஊதிய உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டால், நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பாக அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்களின் ஊதிய அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். வரும் வாரங்களில், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் மற்றும் ஊதிய உச்சவரம்பு என இந்த இரண்டிலும் ஊழியர்களுக்கு பலனளிக்கும் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.