EPFO 3.0 விதிகள்: 7 கோடி+ EPF உறுப்பினர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும்... விரிவான தகவல் இதோ

Published: Jan 16, 2025, 08:44 AM IST|Updated: Jan 16, 2025, 08:44 AM IST

EPFO 3.0 விதிகள்: EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது  ​​இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் EPFO ​​3.0 விதிகளை அறிவித்தது. ஊழியர்கள் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஒரு பெரிய மாற்றத்தை இவை ஏற்படுத்தும். இதனால்  7 கோடிக்கும் மேற்பட்ட EPF உறுப்பினர்கள் பலன் அடைவார்கள்.

1/9

EPFO ​​3.0 விதிகள் : நடப்பு ஆண்டு ஜூன் மாதத்திற்குள் EPFO ​​3.0 விதிகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்த மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா சமீபத்தில் இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு EPFO ​​உறுப்பினர்களுக்கு பல மேம்பட்ட வசதிகளை வழங்கும் என்று கூறினார்.

2/9

EPFO 3.0 தற்போதுள்ள அமைப்பை விட குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை உறுதி செய்யும். குறிப்பாக PF பணத்தை திரும்பப் பெறும் நேரம் மற்றும் பயனர் அனுபவத்தைப் பொறுத்தவரை முக்கிய மாற்றங்கள் இருக்கும். 

PF Claim Rules3/9

பிஎஃப் க்ளெய்ம்

தற்போது, ​​EPF உறுப்பினர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பிஎஃப் க்ளெய்ம் கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகு பணம் பெறுவதற்காக  7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் முதலாளியின் அங்கீகாரமும் தேவை.

EPFO 3.0 Rules4/9

EPFO 3.0 விதிகள்

EPFO 3.0 விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓய்வூதிய நிதி அமைப்பு ATM மூலம் பணம் எடுக்கலாம். EPFO சந்தாதாரர்களுக்கு 24/7 பணம் எடுக்கும் வசதியை வழங்கும் ஏடிஎம் கார்டை வழங்க EPFO ​​முடிவு செய்துள்ளது.

Digitallisation5/9

டிஜிட்டல் மயமாக்கல்

டிஜிட்டல் மயமாக்கல்: பயனர் அனுபவத்தைப் பொறுத்தவரை, ஊழியர்கள் தற்போது தங்கள் EPF கணக்குகளை நிர்வகிக்க யுனிவர்சல் கணக்கு எண் (UAN) போர்டல் அல்லது UMANG செயலியை நம்பியுள்ளனர். இதனை டிஜிட்டல் மயமாக்கி,செயல் முறையை மேலும் எளிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

PF calim  Automatic Procedure6/9

தானியங்கி செயல்முறை

தானியங்கி செயல்முறை: புதிய அமைப்பு ATM பணம் எடுப்பதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், நீங்கள் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு வரம்புகள் இருக்கும். உறுப்பினர்களுக்கு பணம் எடுப்பதற்கு ஒப்புதல் தேவைப்படும் என்றாலும், இதற்கான செயல்முறை முழுமையாக தானியங்கியாக செய்யப்படும். நீண்ட ஆன்லைன் படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

Pf Claim Limit7/9

PF க்ளெய்ம் ​​வரம்பு

PF க்ளெய்ம் ​​வரம்பு: PF கணக்குகளில் இருந்து உறுப்பினர்கள் தங்கள் முழு சேமிப்பையும் திரும்பப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிதிகள் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவதையும் உறுப்பினர்களின் நீண்டகால தேவைகளுக்காக பணத்தை சேமிப்பதை  உறுதிசெய்ய EPFO ​​வரம்புகளை அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mobile App8/9

மொபைல் செயலி அறிமுகம்

மொபைல் செயலி அறிமுகம்: வரவிருக்கும் EPFO ​​மொபைல் செயலி உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகிப்பதை முன்னெப்போதையும் விட எளிதாக மாற்றும். இருப்புகளைச் சரிபார்ப்பதில் இருந்து பிஎப் க்ளெய்ம் கோரிக்கைகளை தாக்கல் செய்வது வரை, இந்த செயலி உங்கள் பணியை எளிதாக்கி நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

EPFO ATM Card9/9

EPFO ATM அட்டை

EPFO ATM அட்டை: முதல் முறையாக, EPFO ​​உறுப்பினர்கள் ஒரு பிரத்யேக ATM அட்டையைப் பயன்படுத்தி நிதியை எடுக்க முடியும். வீடு கட்ட, வீடு வாங்க, குழந்தைகள் கலவி செலவு,  மருத்துவ அவசரநிலை என  நிதித் தேவைகளுக்காக PF சேமிப்பில் உள்ள பணத்தை பெறுவது ATM-ல் இருந்து பணத்தை எடுப்பது போல எளிதாக இருக்கும்.