EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது. வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதா? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. 2025–26 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.25 சதவீதமாகவே தொடர ஒழுங்குமுறை அமைப்பு முடிவு செய்துள்ளது. இபிஎஃப் வட்டி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்கான வழிகளை இங்கே காணலாம்.
மத்திய அறங்காவலர் குழு (CBT) நேற்று, மார்ச் 2 ஆம் தேதி, ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில், 2025–26 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.25 சதவீதமாகவே தொடர ஒழுங்குமுறை அமைப்பு முடிவு செய்துள்ளது.
CBTயின் முடிவிற்குப் பிறகு, 2025–26 ஆம் ஆண்டிற்கான EPF வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு, 2025–26 ஆம் ஆண்டிற்கான EPF மீதான வட்டி விகிதம் EPFO இன் ஏழு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
இதற்கிடையில், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு, தங்கள் EPF வட்டி கடன் நிலையை செக் செய்ய ஆர்வமாக இருந்தால், அதைச் செய்ய 4 எளிய வழிகள் உள்ளன. PF இருப்பைச் சரிபார்க்க இருக்கும் 4 வழிகள்: இபிஎஃப் போர்டல், SMS, மிஸ்டு கால், உமங் செயலி
SMS மூலம் PF இருப்பை செக் செய்வது எப்படி? பயனர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN” என்று SMS அனுப்ப வேண்டும். அதன் பிறகு PF இருப்பு பற்றிய செய்தி கிடைக்கும். குறிப்பு: இபிஎஃப் உறுப்பினர்கள் UAN என்ற இடத்தில் தங்கள் UAN எண்ணை எழுத வேண்டும்.
ஸ்டெப் 1: EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் - epfindia.gov.in / ஸ்டெப் 2: “services” என்பதைக் கிளிக் செய்து “for employers” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். / ஸ்டெப் 3: அதன் பிறகு ‘Member Passbook’ என்பதைக் கிளிக் செய்தால், அது ஒரு லாக்-இன் பக்கத்தைத் திறக்கும். / ஸ்டெப் 4: உங்கள் கணக்கில் லாக் இன் செய்ய, UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். / ஸ்டெப் 5: உள்நுழைந்த பிறகு, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்ட வட்டியைக் காணலாம்.
ஸ்டெப் 1: UMANG போர்ட்டலுக்குச் செல்லவும். / ஸ்டெப் 2: EPFO -வைத் தேடி, view passbook என்பதைக் கிளிக் செய்யவும். / ஸ்டெப் 3: உங்கள் EPF கணக்கின் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) உள்ளிட வேண்டும். / ஸ்டெப் 4: பின்னர் get OTP என்பதைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐச் சமர்ப்பிக்க வேண்டும். / ஸ்டெப் 5: உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து e-passbook -ஐப் பதிவிறக்கம் செய்யவும்.
UAN போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து EPFO இல் தங்கள் விவரங்களைப் பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது.