EPFO New Rules:இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு EPFO 2025 ஆம் ஆண்டில் செய்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? இவற்றால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கு EPFO பணி ஓய்வுக்கு பிறகான சிறந்த நிதி பாதுகாப்பாகவும், ஓய்வூதியத்திற்கான சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகின்றது. நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 7 கோடிக்கும் மேற்பட்ட EPFO உறுப்பினர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செயல்முறைகளை எளிதாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரித்து. உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளித்து பல நன்மைகளை அளித்துள்ளன.
பெரும்பாலான தனியார் துறை ஊழியர்கள் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் 12% தொகையை கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது.
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு EPFO 2025 ஆம் ஆண்டில் செய்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? இவற்றால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இப்போது EPFO அதன் உறுப்பினர்களுக்கு ப்ரொஃபைல் புதுப்பிப்பு செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. உங்கள் UAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், இப்போது உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், பெற்றோரின் பெயர், திருமண நிலை, வாழ்க்கைத் துணையின் பெயர் மற்றும் வேலை தொடங்கும் தேதி ஆகிய விவரங்களை எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆன்லைனில் மாற்ற முடியும்.
வேலையை மாற்றும்போது பிஎஃப் பணத்தை மாற்றுவது இப்போது எளிதாகிவிட்டது. முன்னர், வேலை மாறும்போது PF-ஐ மாற்றுவது ஒரு சிக்கலான மற்றும் நீண்ட செயல்முறையாக இருந்தது. இதில், பழைய மற்றும் புதிய நிறுவனத்தின் ஒப்புதல் அவசியமாக இருந்தது. ஆனால் ஜனவரி 15, 2025 முதல், இந்த செயல்முறை மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பழைய நிறுவனம் அல்லது புதிய நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. PF பணம் புதிய கணக்கிற்கு முன்பை விட எளிதாக மாற்றப்படும்.
EPFO, UAN மற்றும் கூட்டு அறிவிப்பின் செயல்முறையை ஜனவரி 16, 2025 முதல் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களின் UAN ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அல்லது ஆதார் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தால், அவர் தனது வீட்டில் இருந்தபடியே கூட்டு அறிவிப்பை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், UAN உருவாக்கப்படாத, ஆதார் இணைக்கப்படாத உறுப்பினர்கள் ஃபிசிக்கல் படிவத்தை நிரப்ப வேண்டும்.
EPFO ஜனவரி 1, 2025 முதல் ஒரு புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை (CPPS) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஓய்வூதிய பணத்தை ஓய்வூதியதாரர்கள் எந்த வங்கி அல்லது கிளை மூலமாகவும் எடுக்கலாம். முன்னர், ஓய்வூதிய பரிமாற்றத்திற்கு ஒரு பிராந்திய அலுவலகத்திலிருந்து மற்றொரு பிராந்திய அலுவலகத்திற்கு PPO அனுப்பப்பட்டது. இது ஓய்வுதியம் வழங்கும் செயல்முறையை தாமதப்படுத்தியது. ஆனால் இப்போது இந்த செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளது.
இப்போது EPFO அதிக சம்பளத்தில் ஓய்வூதியத்திற்கான விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு உறுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக சம்பளத்தில் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் PF-க்கு கூடுதல் பங்களிப்பைச் செய்து அதை பெறலாம். EPFO-வின் கீழ் வராமல், தங்களுக்கென தனித்தனி அறக்கட்டளை திட்டங்களை நடத்தும் நிறுவனங்களும் இந்தப் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
EPFO-வின் இந்தப் புதிய சீர்திருத்தங்கள் உறுப்பினர்களுக்கான செயல்முறையை எளிதாக்குகிறது. இது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் ரீதியான அதிகாரமளிப்பையும் இவை ஊக்குவித்துள்ளன.
இப்போது EPFO பணத்தை டெபாசிட் செய்வதற்கான வழியாக மட்டுமல்லாமல், ஒரு நவீன டிஜிட்டல் தளமாகவும் மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. மேலும் இபிஎஃப் கணக்கில் அவர்கள் செய்யும் பரிமாற்றங்கள் மற்றும் பிற பணிகளையும் அனுபவத்தையும் இவை மேம்படுத்தியுள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.