EPFO Pension Calculator: EPS மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த பதிவில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
EPS Pension Calculator: இபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500. இதன் கீழ் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000. இந்த குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதிய திட்டம் (EPS) ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இவை தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களாக உள்ளன.
ஊழியர் ஓய்வூதிய திட்டமானது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய திட்டமாகும். இது ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு சேமிக்க உதவுகிறது. EPS 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தனியார் துறை ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. எனினும் நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 8.33% இபிஎஸ் கணக்கிருக்கும் (EPS Account) 3.67% இபிஎஃப் கணக்கிருக்கும் (EPF Account) செல்கின்றது.
EPS மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஒரு ஊழியர் இபிஎஃப் உறுப்பினராக இருந்து பத்தாண்டுகள் பணிபுரிந்து இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் அவர் ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார்.
இபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500. இதன் கீழ் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000. இந்த குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) 10 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இபிஎஸ் மாதாந்திர ஓய்வூதியம் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. இபிஎஸ் மாதாந்திர ஊதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் × ஓய்வூதிய பெறக்கூடிய சேவைக்காலம்) / 70. இதில் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் என்பது ஊழியரின் கடந்த 60 மாத சம்பளத்தின் சராசரியாகும். ஓய்வூதியும் பெறக்கூடிய சேவை காலம் என்பது பணியின் போது ஈபிஎஸ்-க்கு பங்களித்த ஆண்டுகளிலும் எண்ணிக்கையாகும்.
உதாரணமாக, ஊழியரின் ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 என்றும் ஓய்வூதிய சேவை காலம் 10 ஆண்டுகள் என்றும் வைத்துக் கொண்டால், அவரது மாதாந்திர ஓய்வூதியம் = (ரூ. 15,000 × 10) / 70 = ரூ. 2,143 ஆக இருக்கும்.
அதாவது ஊழியர்கள் 10 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தாலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இபிஎஃப் கணக்கில் பங்களித்திருந்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதி அடைகிறார். ஆனால், அதிக ஆண்டுகள் பணிபுரிந்து இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களித்தால், அதிக ஓய்வூதியத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.