EPS Pension Calculation: மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என தெரியுமா? அதற்கான கணக்கிட்டை இந்த பதிவில் காணலாம்.
EPFO Latest News: EPS என்பது ஓய்வுக்குப் பிறகு இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியத்தை அளிக்கும் ஒரு திட்டமாகும். இபிஎஸ் ஓய்வூதியம் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின் கீழ் கணக்கிடப்படுகிறது. மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் EPFO-விலிருந்து எவ்வளவு அதிகபட்ச ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
1/11இபிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது.
2/11இபிஎஃப் கணக்கின் மூலம் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு மொத்தத் தொகை கிடைப்பதோடு மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கிறது. ஊழியர் ஓய்வுதிய திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
3/11EPFO உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்காது. தனியார் துறைகளில் பணிபுரியும் இபிஎஃப் உறுப்பினர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணிபுரிந்து இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்தால் மட்டுமே ஓய்வுதியம் பெற முடியும். ஊழியரின் மொத்த வேலை காலம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில், ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுகிறது.
4/11EPFO-விலிருந்து பெறப்படும் ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: EPS= சராசரி சம்பளம் x ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை/ 70. இங்கே சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் குறிக்கிறது. முந்தைய 12 மாதங்களின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
5/11இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது. அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும். ஓய்வூதிய சம்பளம் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் அகும். இதன் காரணமாக, அதிகபட்ச ஓய்வூதிய பங்கு மாதத்திற்கு 15000x8.33= 1250 ரூபாய்.
6/11அதிகபட்ச பங்களிப்பு மற்றும் சேவை ஆண்டுகளிண் படி, EPS ஓய்வூதிய கணக்கீட்டை நாம் புரிந்து கொண்டால்- EPS= 15000 x35 / 70 = மாதத்திற்கு 7,500 ரூபாய். இந்த வழியில், EPS இலிருந்து அதிகபட்ச ஓய்வூதியமாக 7,500 ரூபாய் வரை பெறலாம் என்பது தெளிவாகிறது.
7/11குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த சூத்திரத்தின் மூலம் உங்கள் ஓய்வூதியத் தொகையையும் நீங்கள் கணக்கிடலாம்.
8/11குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை உள்ளது. EPFO-வில் இருந்து பெறப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000 இன்றைய பணவீக்க காலத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே, அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
9/11EPS விதிகளின் கீழ், ஊழியருக்கு 58 வயதில் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும், அவர் விரும்பினால், 58 வயதிற்கு முன்பே ஓய்வூதியம் பெறலாம். இதற்காக, ஆரம்பகால ஓய்வூதியம் என்ற விருப்பமும் உள்ளது. இதன் கீழ் 50 வயதிற்கு பிறகும் ஓய்வூதியம் பெறலாம். ஆனால் ஊழியர்கள், 58 வயதுக்கு முன்னர் எவ்வளவு ஆண்டு முன்னதாக ஓய்வூதியம் பெறுகிறார்களோ, அதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 4 சதவீதம் குறைவாக ஓய்வூதியம் கிடைக்கும்.
10/11உங்கள் வருவாயில் எந்தப் பகுதி EPS-க்கு செல்கிறது? ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 12 சதவீதம் ஒவ்வொரு மாதமும் EPF-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவு தொகை முதலாளி / நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் முதலாளி / நிறுவனத்தின் பங்கு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), 3.67% EPF-க்கும் செல்கிறது.
11/11பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்படுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ தளங்களை காண அறிவுறுத்தப்படுகிறது.