EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம்... 18, 25, 35 ஆண்டு சர்வீசில் மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

EPFO Pension Calculator: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

EPS Pension Calculator: பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானத்தை வழங்குகிறது. எனினும், 50 வயதில் எர்ளி ரிடயர்மெண்ட் பெற்றவர்களும் சலுகைகளை பெறலாம். கூடுதலாக, 58 வயதை அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் உங்கள் வேலையை விட்டு வெளியேறினால், 58 வயதில் உங்கள் முழு ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெற உங்களுக்கு வசதி உள்ளது. 18, 25, & 35 ஆண்டுகள் பணியில் இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என இங்கே காணலாம்.

1 /11

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 58 வயதை எட்டிய பிறகும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஊழியர்கள் 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்தாலும், இதன் மூலம் சலுகைகளைப் பெறலாம்.

2 /11

ஊழியர் ஓய்வூதியத் திட்டம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் செயல்படுகிறது. நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் பணியாளரின் சம்பளத்தில் தலா 12 சதவீதத்தை EPF-க்கு பங்களிக்கின்றனர். பணியாளரின் முழுப் பங்கும் EPF-க்கு செல்கிறது. ஆனால், நிறுவனத்தின் பங்கில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது, 3.67 சதவீதம் EPF பங்களிப்பிற்கு செல்கிறது.

3 /11

EPS ஓய்வூதியம் பெற EPFO-வில் உறுப்பினராக இருக்க வேண்டும். முன்கூட்டிய ஓய்வூதியத்திற்கு 50 வயதையும் வழக்கமான ஓய்வூதியத்திற்கு 58 வயதையும் அடைந்தவர்களாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.

4 /11

 பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானத்தை வழங்குகிறது. எனினும், 50 வயதில் எர்ளி ரிடயர்மெண்ட் பெற்றவர்களும் சலுகைகளை பெறலாம். கூடுதலாக, 58 வயதை அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் உங்கள் வேலையை விட்டு வெளியேறினால், 58 வயதில் உங்கள் முழு ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெற உங்களுக்கு வசதி உள்ளது.

5 /11

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் தங்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற இபிஎஃப் உறுப்பினர்கள் நாமினியை தேர்வு செய்யலாம். உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களை நாமினியாக பரிந்துரைக்கலாம். உறுப்பினருக்கு குடும்பம் இல்லையென்றால், அவர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

6 /11

இபிஎஸ் -இல் உறுப்பினர்கள் பெறக்கூடிய குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவும் உள்ளது.

7 /11

EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: மாத ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய ஊதியம் x சேவை ஆண்ட்கள்) / 70 (Monthly Pension Amount = (Pensionable Salary x Pensionable Service) / 70). நீங்கள் பெறும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் சேவை காலத்தைப் பொறுத்தது. சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம், கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் அடிப்படை சம்பளம் அகவிலைப்படியின் சராசரி ஆகும்.

8 /11

(தற்போதைய) ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 க்கு பங்களிப்பு செய்தல். ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.50,000 ஆக இருந்தாலும், அவர்களின் EPS ஓய்வூதியம் ரூ.15,000 என்ற சம்பளத்தில்தான் கணக்கிடப்படும்.

9 /11

 18 ஆண்டுகள் சேவையில் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? ஓய்வூதிய சேவை, 18, 25, & 35 ஆண்டுகள்: 18 ஆண்டுகள் சேவையில் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x18/70 = ரூ. 3,857.  18 வருட சேவை காலத்திற்கு சுமார் ரூ.3,857 ஓய்வூதியமாகப் பெறலாம். 25 வருட சேவையுடன் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? (15,000x25)/70 = ரூ.5,357. 25 வருட சேவை காலத்தில் சுமார் ரூ.5,357 ஓய்வூதியமாகப் பெறலாம்.

10 /11

35 வருட சேவையுடன் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x35)/70 = ரூ. 7,500. 35 ஆண்டுகள் பணியாற்றியதற்காக ஓய்வூதியமாக சுமார் ரூ. 7,500 பெறலாம்.

11 /11

(பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள், முதலீட்டு ஆலோசனை அல்ல.  இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் முதலீடு செய்யும் முன் நிதி நிபுணரை அணுகவும் அறிவுறுத்தப்படுகின்றது.)