EPS Pension: ரூ.20,000 அடிப்படை ஊதியம், 35 ஆண்டு சர்வீஸ்... கார்ப்பஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

EPFO Pension Calculator: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? பணி ஓய்வுக்கு பின் மொத்த தொகை, மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

EPS Pension Calculator: மாதா மாதம் ஊழியர்களின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67% இபிஎஃப் கணக்கிலும், 8.33% இபிஎஸ் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2024-25 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இதில் டெபாசிட் செய்யப்படும் பணம், அதன் மீது பெறப்படும் வட்டி மற்றும் ஓய்வூதியத்தில் பெறப்படும் தொகை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

1 /13

ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதியாகும். பணி ஓய்வுக்கு பின்னரும் நமக்கு பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கின்றது. பெரும்பாலான தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) போன்ற திட்டங்களை நம்பியுள்ளனர். இது உழைக்கும் மக்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க உதவும் ஒரு அரசாங்கத் திட்டமாகும்.

2 /13

இந்தியாவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவை பணி ஓய்வு காலத்தை பாதுகாப்பானதாக்கும் இரண்டு திட்டங்களாகும். இபிஎஃப் மூலம், நிதி பாதுகாப்பை அளிக்கும் மொத்தத் தொகையில், இபிஎஸ் மூலம் மாத செலவுகளுக்கு உதவும் ஓய்வூதியமும் கிடைக்கின்றன.

3 /13

மாதா மாதம் ஊழியர்களின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67% இபிஎஃப் கணக்கிலும். 8.33% இபிஎஸ் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2024-25 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இதில் டெபாசிட் செய்யப்படும் பணம், அதன் மீது பெறப்படும் வட்டி மற்றும் ஓய்வூதியத்தில் பெறப்படும் தொகை ஆகியற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

4 /13

ஆனால் EPS-ல் ஒரு வரம்பு இருக்கிறது. இந்தப் பங்களிப்பு உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் ரூ.15,000 வரை மட்டுமே பொருந்தும். இதன் பொருள் உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.15,000 க்கு மேல் இருந்தாலும், ரூ.15,000 மட்டுமே EPS இல் 8.33% ஆகக் கணக்கிடப்படும்.

5 /13

 இபிஎஃப் உறுப்பினர்கள் ஓய்வுபெறும்போது மொத்த தொகையாக எவ்வளவு கிடைக்கும்? ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? இது ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பணி ஆண்டுகளை பொறுத்தது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

6 /13

உங்கள் வயது 25 என்றும் அடிப்படை சம்பளம் ரூ. 20,000 என்றும் வைத்துக்கொள்வோம். ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் உங்கள் பங்களிப்பு: 20,000 × 12% = ரூ.2,400. இபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் இந்த தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது. நிறுவனத்தின் பங்களிப்பு: ரூ. 20,000 × 12% = ரூ. 2,400, இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: EPS-ல்: 15,000 × 8.33% = ரூ. 1,250 (EPS அதிகபட்ச சம்பளம் ரூ. 15,000 இல் கணக்கிடப்படுகிறது). EPF-ல்: 2,400 – 1,250 = ரூ. 1,150.

7 /13

மொத்த EPF தொகை: ரூ.2,400 (உங்களுடையது) + ரூ.1,150 (நிறுவனத்தினுடையது) = ரூ.3,550 / மாதம். EPS-ல்: மாதத்திற்கு ரூ.1,250. 35 ஆண்டுகளுக்குப் பிறகு EPF-ல் இருந்து எவ்வளவு நிதி கிடைக்கும்? இப்போது 25 வயதாகும் ஒரு நபர், 60 வயதில் ஓய்வு பெறுவார். அதாவது அவருக்கு 35 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.3,550 EPF-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. இது ஒரு வருடத்தில் ரூ. 3,550 × 12 = ரூ. 42,600 ஆக இருக்கும்.

8 /13

இப்போது இந்தப் பணம் 8.25% வட்டியுடன் 35 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு வருடமும் ரூ.42,600 டெபாசிட் செய்தால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு 8.25% வட்டியில் சுமார் ரூ.68.9 லட்சம் கிடைக்கும். உங்கள் பணம் ஒவ்வொரு வருடமும் வளரும். முதல் ஆண்டில், ரூ.42,600க்கு 8.25% வட்டி (ரூ.3,514) கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த வட்டி முந்தைய பணத்திற்கும் வட்டிக்கும் கிடைக்கும். இது 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், தொகை ரூ.68.9 லட்சத்தை எட்டுகிறது.

9 /13

இப்போது இந்தப் பணம் 8.25% வட்டியுடன் 35 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு வருடமும் ரூ.42,600 டெபாசிட் செய்தால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு 8.25% வட்டியில் சுமார் ரூ.68.9 லட்சம் கிடைக்கும். உங்கள் பணம் ஒவ்வொரு வருடமும் வளரும். முதல் ஆண்டில், ரூ.42,600க்கு 8.25% வட்டி (ரூ.3,514) கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த வட்டி முந்தைய பணத்திற்கும் வட்டிக்கும் கிடைக்கும். இது 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், தொகை ரூ.68.9 லட்சத்தை எட்டுகிறது.

10 /13

EPS-லிருந்து எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? ஒவ்வொரு மாதமும் EPS-ல் ரூ.1,250 டெபாசிட் செய்யப்படுகிறது. இது பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக மாறும். ஓய்வூதியம் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: ஓய்வூதியம்=(பணியாற்றிய ஆண்டுகள்×சராசரி சம்பளம்)÷70. இங்கு சேவை காலம்: 35 ஆண்டுகள். சராசரி சம்பளம்: கடந்த 60 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம். EPS-ல் இது ரூ.15,000 வரம்பு வரை கணக்கிடப்படுகிறது. ஆகையால் ஓய்வூதியம் = (35 × 15,000) ÷ 70 = 5,25,000 ÷ 70 / அதாவது மாதத்திற்கு ரூ.7,500.

11 /13

ஒட்டுமொத்த நன்மை எவ்வளவு? இப்போது இரண்டையும் இணைப்போம்: EPF-லிருந்து: ரூ.68.9 லட்சம் (மொத்த தொகை). EPS இலிருந்து: மாதத்திற்கு ரூ. 7,500.  ஓய்வூதியத்தை மொத்தத் தொகையாக மாற்றுவது கடினம், ஆனால் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு 20 ஆண்டுகள் (60 முதல் 80 ஆண்டுகள் வரை) வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்: 7,500 × 12 × 20 = ரூ 18 லட்சம். மொத்த லாபம்: ரூ. 68.9 லட்சம் + ரூ. 18 லட்சம் = ரூ. 86.9 லட்சம். ஆனால் இது வெறும் மதிப்பீடுதான், ஏனென்றால் ஓய்வூதியம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

12 /13

சம்பள உயர்வு எவ்வளவு பலனளிக்கும்? இந்த அனைத்து கணக்கீடுகளும் ரூ.20,000 என்ற சம்பளத்தில் கணக்கிடப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு வருடமும் சம்பளம் 5-10% அதிகரித்தால் இதில் எவ்வளவு ஏற்றம் ஏற்படும்? 5% அதிகரிப்பு: EPF நிதி 35 ஆண்டுகளில் ரூ.1.2 கோடியை எட்டும். 10% அதிகரிப்பு: இது ரூ.2 கோடியை தாண்டலாம். EPS-க்கான பங்களிப்பு ரூ.1,250 மட்டுமே இருக்கும், ஆனால் சம்பள உயர்வு காரணமாக ஓய்வூதியம் சற்று அதிகரிக்கக்கூடும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.