EPS Pension: ரூ.58,000 அடிப்படை ஊதியம், 29 ஆண்டு சர்வீஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

Published: Aug 13, 2025, 09:21 AM IST|Updated: Aug 13, 2025, 09:21 AM IST

EPS Pension Calculation: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இது எப்படி கணக்கிடப்படுகிறது? இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை அவர்களது சம்பளம் மற்றும் பணி ஆண்டுகளைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம் கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் சராசரி ஆகும்.

Employee Pension Scheme1/13

ஊழியர் ஓய்வூதியத் திட்டம்

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் மக்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இது EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ஆல் நிர்வகிக்கப்படுகிறது. EPFO இல் உறுப்பினராக இருப்பவர்கள் தானாகவே ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.

EPFO2/13

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) யார் தகுதியானவர்? இத்ன் பலன்களைப் பெற ஆரம்பகால ஓய்வூதியத்திற்கு 50 வயதையும் வழக்கமான ஓய்வூதியத்திற்கு 58 வயதையும் நிறைவுசெய்திருக்க வேண்டும். மேலும், EPFO இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.

EPS Contribution3/13

இபிஎஸ் பங்களிப்பு

ஊழியர்களும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களும் இபிஎஃப் கணக்கில் 12% பங்களிக்கிறார்கள். ஊழியர்களின் பங்களிப்பான 12% முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் 12 சதவீத பங்களிப்பில் 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) 3.67 சதவீதம் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF) செல்கிறது. 

EPS Pension Calculation4/13

இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு

ஊழியர் ஓய்வூதியத் திட்டம், 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு அல்லது 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. உறுப்பினர் 58 வயதுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சேவையை விட்டு வெளியேறினால், 58 வயதில் முழுமையான ஓய்வூதியத்தை திரும்பப் பெற இது ஊழியர்களை அனுமதிக்கிறது. ஊழியர்கள் முழுமையாகவும் நிரந்தரமாகவும் ஊனமுற்றால், அவர்கள் தேவையான சேவைக் காலத்தை நிறைவேற்றாமலேயே மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெறும் சேவை காலத்திற்கு முன் அல்லது பின் உறுப்பினர் இறந்தால் உறுப்பினரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.

Employee Pension Scheme5/13

ஊழியர் ஓய்வூதியத் திட்டம்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களது ஓய்வூதிய சலுகைகளைப் பெறும் பயனாளியைத் தேர்வுசெய்ய EPS நாமினியை நியமனம் செய்வது அவசியமாகும். ஊழியர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களை நாமினியாக பரிந்துரைக்கலாம். குடும்பம் இல்லையென்றால், யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

Minimum Monthly Pension6/13

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 1,000 ஆகும். அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உள்ளது.

EPS7/13

இபிஎஸ்

EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.

EPFO Pension calculator8/13

ஓய்வூதிய கணக்கீடு

இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு: ஊழியர் பெறும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை சேவை காலத்தைப்பொறுத்து கணக்கிடப்படுகிறது. சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம், கடந்த 12 மாதங்களுக்கான ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் உங்கள் DA-வின் சராசரியாகும். இபிஎஸ் ஓய்வூதியம் தற்போதைய ஊதிய உச்சவரம்பான ரூ.15,000-க்கு கணக்கிடப்படுகிறது. ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.58,000 ஆக இருந்தாலும், அவரது EPS ஓய்வூதியம் ரூ.15,000 சம்பளத்தில்தான் கணக்கிடப்படும்.

EPFO Members9/13

இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஒருவருக்கு 18, 29 மற்றும் 33 ஆண்டுகள்க்கு, ரூ.58,000 அடிப்படை சம்பளத்தில் மாதாந்திய ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என இங்கே காணலாம்.

EPS Pension10/13

இபிஎஸ் ஓய்வூதியம்

ரூ.58,000 அடிப்படை சம்பளத்தில், 18 வருட சேவையில் மாத ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x18)/70 = ரூ. 3,857. ஊழியர்கள் 18 ஆண்டுகள் பணியாற்றினால் சுமார் ரூ. 3,857 ஓய்வூதியமாகப் பெறலாம்.

EPS Pensioners11/13

இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள்

ரூ.58,000 அடிப்படை சம்பளத்தில், 29 வருட சேவையில் மாத ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x29)/70 = ரூ. 6,214. சேவை காலம் 29 வருடங்களாக இருந்தால் ரூ. 6,214 ஓய்வூதியமாகப் பெறலாம்.

EPS Pension calculation12/13

இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு

ரூ.58,000 அடிப்படை சம்பளத்தில், 33 வருட சேவையில் மாத ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x33)/70 = ரூ. 7,071. ஊழியர்கள் 33 ஆண்டுகள் பணியாற்றினால் சுமார் ரூ. 7,071 ஓய்வூதியமாகப் பெறலாம்.

Disclaimer13/13

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்படுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ தளங்களை காண அறிவுறுத்தப்படுகிறது.