EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் கூடிய விரைவில் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
EPFO Update: சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்கப்படாமல் இருக்கும் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வ்தியம் தற்போது அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட EPS-95 ஓய்வூதியத் திட்டம், மூன்றாம் தரப்பினரால் அதாவது வெளிப்புற நிபுணர்களால் முதல் முறையாக ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தகுதியான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதா மாதம் இபிஎஃப் கணக்கிற்கு 12% தொகை கழிக்கப்படுகின்றது. நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இதில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும், ஒரு பங்கு இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.
இபிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு பெரிய நிதியை கார்பஸாக பெறுகிறார்கள். மேலும் இபிஎஸ் மூலம் மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது. ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 பெறுகிறார்கள். இதை ரூ.3000 ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அரசாங்கம் அதிகரித்தால், அது நீண்ட காலமாக இந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கும் 78 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அடுத்த சில மாதங்களில் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்யலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில், ஓய்வூதியம் ரூ.250 லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது அதை ரூ.3000 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இருப்பினும், இந்த முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்துவதற்கான தேவை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2025 பட்ஜெட்டுக்கு முன்பு, EPS இன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஓய்வூதியத்தை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரினர். அப்போது இது பரிசீலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.
நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரூ.1,000 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் என்பது மிக குறைவான ஒரு அளவாக உள்ளது. இப்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தால் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் போதுமானதாக இல்லை (EPF ஓய்வூதிய உயர்வு). மேலும், EPS இன் மொத்த கார்பஸ் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆகையால் மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பது நிதி ரீதியாக சாத்தியமானதாகவே பார்க்கப்படுகின்றது.
இபிஎஸ் திட்டத்தின் கீழ் சுமார் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர், அவர்களில் 36.6 லட்சம் பேர் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 பெறுகின்றனர்.
இதற்கிடையில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ,7500 அதிகரிக்கும் என்றும், ரூ.9,000 அதிகரிக்கும் என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இபிஎஸ் அதிகபட்ச ஓய்வூதியம் 7,500 ரூபாய்தான் என்ற நிலையில் இது சாத்தியமல்ல. இதற்கும் முதலில் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட வேண்டும். அது நடக்க, ஊதிய உச்சவரம்பை அரசு ரூ.15,000 -இலிருந்து அதிகரிக்க வேண்டும்.
தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, EPFO -வின் கீழுள்ள ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இபிஎஸ் திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், இது 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது. இது ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தகுதியான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.