EPS Pension: PF உறுப்பினர்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் கிடைக்கும், முழு லிஸ்ட் இதோ

EPFO Monthly Pension: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPS Pension: 10 ஆண்டுகளுக்கு EPFO-வில் பங்களிக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. இந்த ஓய்வூதியம் உங்களுக்கு 58 வயதிலிருந்து வழங்கப்படுகிறது. இதை பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும். EPFO ​​வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான ஓய்வூதியங்களை வழங்குகிறது என்பதை பலர அறிந்திருக்க வாய்ப்பில்லை. EPFO ​​உறுப்பினரின் பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் பல்வேறு வகையான ஓய்வூதியங்களின் கீழ் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இதற்கான விதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக, ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தை (Employees Pension Scheme) நிர்வகிக்கின்றது. இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் உள்ள தொழிலாளர்கள் 58 வயதை எட்டியவுடன் இபிஎஸ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். இபிஎஸ் -இன் கீழ் கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /10

ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு 58 வயதானவுடன் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ​​EPS மூலம் ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஓய்வூதியத் தொகை ஓய்வூதிய நிதிக்கு நீங்கள் செலுத்தும் மொத்த பங்களிப்பைப் பொறுத்தது. ஊழியர் விரும்பினால், 60 வயது முதலும் ஓய்வூதியம் பெறலாம். இந்த நிலையில் ஆண்டுக்கு 4% அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

3 /10

வழக்கமாக, EPFO ​​58 வயதிலிருந்து ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் ஒரு உறுப்பினர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து 58 வயதிற்கு முன்பே ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் 50 வயதிற்குப் பிறகு அதைப் பெறலாம். முன்கூட்டியே ஓய்வூதியம் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் EPFO ​​செய்துள்ளது. இருப்பினும், எர்ளி பென்ஷனில், EPFO ​​உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் 58 வயதில் ரூ.10,000 ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால், 57 வயதில் கோரும்போது, ​​தொகையில் 4% குறைந்து ரூ.9,600 வழங்கப்படும். 56 வயதில், தொகையில் 8% குறைந்து ரூ.9,200 ஓய்வூதியமாக கிடைக்கும்.

4 /10

ஒரு EPFO ​​சந்தாதாரர் இறந்த பிறகு, அவரது மனைவி மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. மூன்றாவது குழந்தைக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு, ஆனால் முதல் குழந்தையின் ஓய்வூதியம் 25 வயதில் நிறுத்தப்படும்போது, ​​மூன்றாவது குழந்தையின் ஓய்வூதியம் தொடங்கும். EPFO சந்தாதாரர் இறந்தால். 10 வருட ஓய்வூதிய விதி பொருந்தாது. ஒரு சந்தாதாரர் ஒரு வருடம் பங்களித்திருந்தாலும் கூட, அவர் இறந்தால், அவரது விதவை மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம் பெற உரிமை பெறுவார்கள்.

5 /10

பணியின் போது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு, வயது மற்றும் ஓய்வூதிய நிதிக்கு 10 ஆண்டுகள் பங்களிப்பு என்ற நிபந்தனை பொருந்தாது. ஒரு சந்தாதாரர் இரண்டு வருடங்கள் EPS-க்கு பங்களித்திருந்தாலும், அவர் இந்த ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்.

6 /10

ஒரு EPFO ​​சந்தாதாரர் இறந்து அவரது வாழ்க்கைத் துணையும் இறந்துவிட்டால், 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், EPFO ​​அனாதை ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஆனால் இந்த ஓய்வூதியம் 25 வயது வரை மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

7 /10

EPFO உறுப்பினருக்கு மனைவி அல்லது குழந்தை இல்லையென்றால், EPFO ​​உறுப்பினர் இறந்த பிறகு, இந்த ஓய்வூதியம் அவர் பரிந்துரைத்த நாமினிக்கு வழங்கப்படும். EPFO உறுப்பினர் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் நாமினிகளாக நியமித்திருந்தால், அத்தகைய சூழ்நிலையில் இருவருக்கும் நிலையான பங்கின்படி ஓய்வூதியத் தொகை கிடைக்கும். யாராவது ஒருவர் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தால், முழுத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.

8 /10

EPFO-வின் கீழ், ஒரு EPFO ​​சந்தாதாரர் இறந்தால், அவரைச் சார்ந்திருக்கும் தந்தை ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவராகக் கருதப்படுவார். தந்தை இறந்துவிட்டால், சந்தாதாரரின் தாய் ஓய்வூதியத்தைப் பெறுவார். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு, படிவம் 10D-ஐ நிரப்ப வேண்டும்.

9 /10

 இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் செலுத்தும் தொகை முழுமையாக இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. எனினும், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும் ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.பங்களிக்கின்றது. எனினும், இதில் ஒரு பங்கு இபிஎஎஃப் கணக்கிற்கு (EPF Account) ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. EPF குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.