Government Schemes For Indian Couple: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். நல்ல தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், அதிகமாக சேமிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
5 Important Government Schemes: ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அரசும் தங்கள் தரப்பில் இருந்து இவர்களுக்கென சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தைப் பாதுகாக்க சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து பார்ப்போம்.
வீட்டுக் கடன் வட்டியில் ₹2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும். உதாரணம்: ₹25 லட்சம் கடனில், நீங்கள் சுமார் ₹2.35 லட்சம் வட்டியைச் சேமிக்கலாம். யார் விண்ணப்பிக்கலாம்: முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் (ஒருங்கிணைந்த வருமானம் ஆண்டுக்கு ₹18 லட்சம்). எப்படி விண்ணப்பிப்பது: pmaymis.gov.in தளத்தை பார்வையிடவும் CLSS பிரிவின் கீழ் விண்ணப்பிக்கவும் மற்றும் தேவையானஆவணங்களுடன் உங்கள் வங்கியை அணுகவும்.
சிறிய சேமிப்புகளில் மிக அதிக வட்டி 8.2% கிடைக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா. முதலீட்டு வரம்பு: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ₹250 - அதிகபட்சம் ₹1.5 லட்சம். எப்படி விண்ணப்பிப்பது: தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் கணக்கைத் திறக்கவும். தேவையான ஆவணங்கள் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்கள்.
பிரசவ காலத்தில் ₹700 - ₹1,400 உதவித்தொகை கிடைக்கும். BPL ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், SC/ST பெண்கள் அல்லது குறைந்த வருமான ஈட்டும் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ASHA பணியாளர்களிடம் பதிவு செய்யவும். பிபிஎல் ரேஷன் அட்டை மற்றும் கர்ப்ப சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும்,
26 வாரங்கள் வரை ஊதியத்துடன் பெண்களுக்கு விடுப்பு மற்றும் தந்தையருக்கு 15 நாட்கள் விடுப்பு (தனியார் துறையில் மாறுபடும்) கிடைக்கும். விண்ணப்பிக்கும் முறை: மகப்பேறு கால ஆவணம் மற்றும் தந்தையர் விடுப்பு விண்ணப்பத்தை பணி புரியும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்ப கால மருத்துவச் சான்று அவசியாகும்.
80CCD(1B) இன் கீழ் ₹50,000 வரை சலுகை பெறலாம். தேசிய ஓய்வூதியத் திட்டதில் இணைவதன் மூலம் 8% வரை வட்டி கிடைக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: enps.nsdl.com தளத்தை பார்வையிடவும். ஆன்லைனில் அல்லது உங்கள் வங்கி மூலம் கணக்கைத் திறக்கவும்.