DC Predictable Playing XI: ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கப்போவது யார்? அந்த அணியின் பிளேயிங் 11 என்ன? என்பதை பார்க்கலாம்.
IPL 2025: ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. டெல்லி அணி வரும் திங்கட்கிழமை அன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது. கே.எல்.ராகுல் முதல் 3 அல்லது 4 போட்டிகள் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கப்போவது யார்? அந்த அணியின் பிளேயிங் 11 என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸ் இம்முறை டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். அவர் இந்த அணியின் தொடக்க வீரராக ஃபாஃப் டு பிளெசிஸ் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேக் ஃப்ரேசர் மெக்கரக் - டு பிளெசிஸுடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இளம் வீரரான இவர் அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். கடந்த சீசனில் அவர் அந்த அணிக்காக 9 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை எடுத்தார்.
அபிஷேக் போரெல் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடினார். அவர் அந்த சீசனில் 360 ரன்கள் எடுத்தார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 3வது இடத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடந்த சீசனில் 378 ரன்களை எடுத்தார். இவர் 4வது இடத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டரான அக்சர் படேல் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்தியாவுக்காக விளையாடியது போல், அவர் 5வது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது.
அசுதோஷ் சர்மா கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இம்முறை அவர் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். இவர் 6வது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் சமீர் ரிஸ்வி. அழுத்தத்தின் கீழ் பெரிய ஷாட்களை அடிக்கும் திறன் கொண்டவர். அவர் 7வது வரிசையில் இறங்கினால், டெல்லி அணிக்கு சிறப்பாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் , கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இம்முறை இவர் டெல்லி அணியில் விளையாட உள்ளார். இவரது அபார பந்து வீச்சு டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தரும்.
யாக்கருக்கு பெயர் போன நடராஜன் இம்முறை டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். இவரது பந்து வீச்சு டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சுழலுக்கு பெயர் போனவர். இவரது பந்து வீச்சு மிடில் ஓவர்களில் எதிர் அணியின் விக்கெட்களை சாய்க்கும்.
இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் டெல்லி அணியின் கூடுதல் பலம் ஆவார். அவரது துல்லியமான லைன் அண்ட் லெந்த் மூலம், அவர் 2025 ஐபிஎல்லில் எந்த பேட்டர்னையும் துன்புறுத்த முடியும்.
ஐபிஎல் 2025-ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக மோஹித் சர்மா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக, அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.