Famous Actor Introduced His GF On His 60th Birthday : பிரபல நடிகர் ஒருவர், தனது 60வது பிறந்தநாளில் 3வது காதலியை இண்ட்ரோ செய்து வைத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Famous Actor Introduced His Current GF On His 60th Birthday : “காதலுக்கு வயதில்லை” என்ற வாசகத்தை பல இடங்களில் படித்திருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக பல வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம் செய்து கொண்டவர்களையும் பார்த்திருப்போம். இங்கும் ஒரு நடிகர் அப்படித்தான், தனது அறுபதாவது வயதில் 3வது காதலியை தனது முன்னாள் மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
பிரபல நடிகர் ஒருவர், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் அவர் தனது தற்போதைய காதலியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். யார் அந்த நடிகர் தெரியுமா?
அந்த நடிகர், நம்ம அமீர்கான்தான்! இவரை அனைவரும், கஜினி படத்தின் இந்தி ரீ-மேக்கில் பார்த்திருப்போம். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான இவர், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அமீர்கான், பாலிவுட்டில் இருக்கும் 3 பெரிய ‘கான்’ நடிகர்களுள் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகியுள்ள 3 இடியட்ஸ், தங்கல், தூம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியுள்ளது. முதல் மனைவியின் பெயர் ரீனா தத்தா. 1986ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், 2002ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றன. இவர்களுக்கு இரா கான், ஜுனைத் கான் என இரு குழந்தைகள் உள்ளனர்.
அமீர்கானின் 2வது மனைவியின் பெயர், கிரன் ராவ். இவர், திரைப்பட இயக்குநர். 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டைவர்கள், 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கும் அசாத் என்ற மகன் இருக்கிறான்.
அமீர்கான், தனது 60வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் தனது புதிய காதலியை அறிமுகம் செய்தார்.
இவரது பெயர், கௌரி. இவருக்கு 46 வயதாவதாக கூறப்படுகிறது. இவர் பெங்களூருவில் இருப்பவர். பெரிய சலூன் கடையின் ஓனர் ஆக இருக்கிறாராம். இவரும் அமீர்கானும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஒன்றாக பணிபுரிந்தார்களாம். கடந்த ஆண்டில்தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
அமீர்கான், 60 வயதில் தனது புதிய காதலியை அறிமுகம் செய்து வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.