Famous Actor Drank His Wife Breast Milk : இந்தியாவின் பிரபல நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Famous Actor Drank His Wife Breast Milk : பிறந்த குழந்தைகளுக்கு, தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பது வழக்கம். ஆனால், வளர்ந்த்வர்களும் இதை விரும்புகின்றனர் என்பதை, ஒரு நடிகரின் பேச்சு நிரூபித்திருந்தது. குழந்தைக்காக, தனது மனைவி வைத்திருந்த தாய்ப்பாலை, தான் குடித்ததாக ஒரு நடிகர் ஓபனாக பேசியிருந்தார். அந்த நடிகர் யார் என்று தெரியுமா? இதோ விவரம்!
பொதுவாகவே, திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்கள் அல்லது தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் தங்கள் உடலை பராமரித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள், தங்களின் உடல் ஷேப்பை இழக்காமல் இருப்பதற்காக ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சி செய்வது, ஹெல்தியாக சாப்பிடுவது என்றிருக்கின்றனர். அப்படி ஒரு நடிகர், ஆரோக்கிய காரணங்களுக்காக தன் மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக சொன்ன விஷயம் வைரலானது
இந்த நடிகர், இந்திய அளவில் பிரபலமான ஒருவர். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றாலும் இவர் நடிக்கும் படங்களை பார்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. தன் படங்களின் மூலம் அனைவரையும் முற்போக்காக யோசிக்க வைப்பவர் இவர்.
அந்த நடிகர் வேறு யாருமில்லை, ஆயுஷ்மான் குரானாதான். எந்த சினிமா பின்புலனும் இல்லாமல் திரையுலகிற்குள் நுழைந்தவர் ஆயுஷ்மான் குரானா. இவருக்கு 2012ல் வெளியான ‘விக்கி டோனர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
ஆயுஷ்மான் குரானாவின் பல படங்கள், தமிழில் வீட்ல விஷேசம், நெஞ்சுக்கு நீதி, அந்தாகன் உள்ளிட்ட பல படங்கள் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன.
ஆயுஷ்மான் குரானா, கல்லூரியின் படிக்கும் போதே தஹிரா காஷ்யப் என்கிற ஒருவரை காதலித்தார். இவர்கள், பெரியவர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிராவிற்கு 2018ல் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தன் குடும்பத்தினரின் உதவியோடு அதிலிருந்து மீண்டு வந்தார். ஆயுஷ்மான் இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது விளையாட்டாக தன் மனைவியின் தாய்ப்பாலை குடித்தது குறித்து பேசியிருந்தார். புரதத்திற்காக இப்படி செய்ததாக அப்போது அவர் கூறியிருந்தார்.
தாஹிரா, ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதில், தனது கணவர் தன் பாலை திருடி குடித்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இது அந்த சமயத்தில் வைரலான பேச்சாக இருந்தது.