Vijay Sethupathi First Choice For Meiyazhagan Karthi : சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். இந்த படத்தில், கார்த்திக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Vijay Sethupathi First Choice For Meiyazhagan Karthi : பிரேம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தில், கார்த்திதான் ‘மெய்யழகன்’ என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரமாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இதில், கார்த்திக்கு முன்பு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர் யார் தெரியுமா? இதோ பார்ப்போம்.
1/7கடந்த 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தில் ஹைலைட்டே, அரவிந்த் சாமி-கார்த்தியின் நட்பும், பாசமும்தான். இப்படம், தியேட்டரில் வெளியான போது பலருக்கு பெரிதாக பிடிக்கவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பிறகு பலர் இப்படத்தை கொண்டாடினர்.
2/7மெய்யழகன் படத்தில், கார்த்தியின் பெயரை கண்டுபிடிக்க, அரவிந்த் சாமி படும் போராட்டங்கள், காண்போரை சிரிக்கவும், அழவும் வைத்தது. கடைசியில்தான் கார்த்தியின் பெயர் தெரியும். படத்தில், ஊரின் பாசம், அண்ணன்-தங்கைக்குள் இருக்கும் அன்பு என பல அற்புதமான விஷயங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன.
3/7மெய்யழகன் படத்தை, பிரேம் குமார் இயக்கியிருந்தார். இவர், இப்படத்தில் கார்த்தியை நடிக்க வைக்கும் முன்பு, அந்த கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகரைத்தான் கேட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
4/7விஜய் சேதுபதியைதான், மெய்யழகன் படத்தில் நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார் பிரேம் குமார். ஆனால், அப்போது அவர் வேறு சில படங்களில் கமிட் ஆகி இருந்ததால், கால் ஷீட் பிரச்சனை வந்துள்ளது. எனவே, தன்னால் நடிக்க இயலாது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து கார்த்திக்கு இந்த வாய்ப்பு சென்றிருக்கிறது.
5/7விஜய் சேதுபதி தற்போது தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
6/7விஜய் சேதுபதி, மெய்யழகன் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவற விட்டது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், தான் மெய்யழகன் ஸ்கிரிப்டை படித்துவிட்டு அசந்து போனதாக கூறியிருக்கிறார்.
7/7மெய்யழகன் திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போனதும், தான் அந்த வாய்ப்பை தவற விட்டதும், தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாக சமீபத்திய நேர்காணலில் விஜய் சேதுபதி குறிப்பிட்டிருந்தார்.