Famous Actress Said No To Act With Rajinikanth : பிரபல நடிகை ஒருவர், ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க நான்கு முறை மறுத்திருக்கிறார். கடைசியில், ஒரு முறை மட்டும் ரொம்ப கேட்டுக்கொண்டதால் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Famous Actress Said No To Act With Rajinikanth : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், ரஜினிகாந்த். இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதை பல நடிகைகள் கனவாக கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு டாப் நடிகை மட்டும் ரஜினிகாந்துடன் நடிக்க 4 முறை மறுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
1/7கோலிவுட்டில் டாப் நடிகராக இருப்பவர், ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை சூப்பர் ஸ்டாராக மகிழ்வித்து வரும் இவர், பல இளம் நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
2/7நடிகர் ரஜினிகாந்த், டாப் நடிகராக இருந்தாலும் சில முறை அவர் நடித்த படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்துள்ளது. அது மட்டுமன்றி, ரஜினியுடன் நடிக்க எந்த நடிகையும் பெரிதாக யோசிக்க மாட்டார்கள். ஆனால், இங்கு ஒரு நடிகை அவருடன் நடிக்க சற்றே தயங்கி இருக்கிறார்.
3/7ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்த நடிகையும், ஒரு டாப் நடிகை ஆவார். உலக அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
4/7அவர் வேறு யாருமில்லை, ஐஸ்வர்யா ராய்தான். இவர் தன்னுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வெகு நாட்களாக ஆசைப்பட்டாராம்.
5/7முதலில் ‘படையப்பா’ படத்தில் இவரை நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது அவர் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். பின்னர் பாபா படத்தில் கூட ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கின்றனர். அதற்கு இவர் மறுக்கவே, அந்த வாய்ப்பு மனிஷா கொய்ராலாவுக்கு சென்றது.
6/7தொடர்ந்து சிவாஜி மற்றும் சந்திரமுகி படங்களிலும் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், அதிலும் நடிக்க மறுத்தார். தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சியால் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.
7/7ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய் சேர்ந்து நடித்த படம், எந்திரன். அதுவும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் ரொம்பவே கேட்டுக்கொண்டதால் அதில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததாக கூறப்படுகிறது.