சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Apr 19, 2025, 10:37 AM IST|Updated: Apr 19, 2025, 10:37 AM IST

Famous Actress Gave Voice To Genelia Shalini In Sachein : சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெனிலியாவின் கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார் தெரியுமா?

Famous Actress Gave Voice To Genelia Shalini In Sachein : விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம், சச்சின். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இவருக்கு அப்போது தமிழ் சுத்தமாக தெரியாது. இந்த படத்தில் அவருக்கு நடித்தபோது, அவருக்கு வேறு ஒரு நடிகை வாய்ஸ் கொடுத்தார். அவர் யார் தெரியுமா?

சச்சின்1/7

சச்சின்

20 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம், சச்சின். இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். எஸ்.தாணு இயக்கத்தில் படம் வெளியாகியிருந்தது.

சச்சின் திரைப்படம்2/7

சச்சின் திரைப்படம்

கோலிவுட் திரையுலகில், ரசிகர்களின் கவனம் ஈர்த்த ரொமாண்டிக் காமெடி படங்களுள் ஒன்று சச்சின். இந்த திரைப்படத்தில், விஜய் துருதுருவென இருக்கும் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடித்திருப்பார்.

சச்சின் ரீ ரிலீஸ்3/7

சச்சின் ரீ ரிலீஸ்

சச்சின் படம் புனித வெள்ளியை முன்னிட்டு, ஏப்ரல் 18 (நேற்று) வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தியேட்டரில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

ஜெனிலியா4/7

ஜெனிலியா

பாய்ஸ் படத்திற்கு பிறகு, ஜெனிலியா நடித்திருந்த படம் சச்சின். இந்த படத்தில் அவருக்கு வித்தியாசமாக க்யூட் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் இருந்துதான், பலரும் ஜெனிலியாவின் ரசிகர்களாக மாற தொடங்கினர்.

ஜெனிலியா விஜய்5/7

ஜெனிலியா விஜய்

ஜெனிலியா-விஜய்யின் கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் நன்றாக இருந்தது. இப்போது தியேட்டரிலும் பலர் இந்த படத்தை கொண்டாட, இந்த காதலும் ஒன்றாகும்.

கனிகா6/7

கனிகா

சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் ஒரு பிரபல நடிகை. அவரது பெயர், கனிகா. பல படங்களில் ஹீரோயினாகவும், இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இவர் சில நடிகைகளுக்கு வாய்ஸும் கொடுத்திருக்கிறார்.

கனிகா7/7

கனிகா

கனிகா ஜெனிலியாவிற்கு மட்டுமல்ல இன்னும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.