இணையத்தில் பரவிய நடிகையின் அந்தரங்க வீடியோ! அவரே வெளியிட்ட போஸ்ட்..

Kiran Rathod Obscene Video Viral : பிரபல நடிகை கிரணின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இது குறித்த ஒரு பதிவினை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Kiran Rathod Obscene Video Viral : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், கிரண் ராத்தோட். 2000 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்த இவர், இப்போது திரையுலகை விட்டு கொஞ்சம் விலகியே இருக்கிறார். இவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக புகார் தெரிவித்திருக்கும் இவர், இதனை பதிவிறக்கம் மற்றும் ஷேர் செய்பவர்கள், தண்டனைக்கு உட்பட்டவர்களாக ஆவதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

1 /7

கோலிவுட்டில் இப்போது டாப் நடிகர்களாக வலம் வரும் விக்ரம், அஜித் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தவர், கிரண். இவர் தமிழில் மட்டுமல்ல சில இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

2 /7

கிரணுக்கு தற்போது 44 வயதாகிறது. மும்பையை சேர்ந்த இவர், தற்போது ஜெய்பூரில் பிறந்திருக்கிறார். இவர் அறிமுகமானதே யாதீன் என்கிற இந்தி படம் மூலமாகத்தான்.

3 /7

கிரணுக்கு தமிழில் அறிமுகம் தந்தது, வில்லன் திரைப்படம்தான். அதில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு அஜித்களில், ஒரு அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் ஆகிய படங்களில் நடித்தார்.

4 /7

விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலில் நடனமாடியிருக்கும் இவர், தெலுங்கிலும் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார்.

5 /7

கிரனுக்கு 2010ஆம் ஆண்டுக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், கொஞ்சம் திரையுலகை விட்டு தள்ளியே இருந்தார். இத்தனை நாட்களாக ஹீரோயினாக நடித்து வந்தவர், ஆம்பள படத்தில் ஒரு பெண்ணுக்கு அம்மாவாக நடித்தார்.

6 /7

பட வாய்ப்புகள் வராததால், கிரண் ஒரு செயலியை தொடங்கினார். அது ஒரு Adult Service செயலியாகும். அதில் சந்தா செலுத்துவோருக்கு கிரண், வீடியோ கால் மூலம் சேவைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

7 /7

கிரண், சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், இது குறித்து சைபர் கிரைமில் புகார் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த வீடியோவை யாரும் பகிர்பவர்கள் தண்டனையை சந்திப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.