ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகை! 13 வருடங்களுக்கு பின்பு கோலிவுட் ரீ-எண்ட்ரி..

Famous Actress To Act In Jailer 2 : ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் புதிதாக ஒரு நடிகை  இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

Famous Actress To Act In Jailer 2 : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது புதிதாக ஒரு நடிகை இதில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?

1 /7

தமிழ் திரையுலக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 70 வயதை தாண்டியும் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர், சமீபத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பி/ற்காக வெளியூர் சென்றிருந்தார்.

2 /7

ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதன் முதல் பாகம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

3 /7

ரஜினி, கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்று கூறப்பட்ட நிலையில், தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக அவரே அறிவித்திருக்கிறார்.

4 /7

ஜெயிலர் 2 படத்தில் இப்போது புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த ஒருவர்தான்.

5 /7

இந்த நடிகையின் பெயர், மேக்னா ராஜ். கன்னட நடிகையான இவர், ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

6 /7

2010ஆம் ஆண்டில் வெளியான காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் மேக்னா ராஜ் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார். அதன்பிறகு உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

7 /7

2012ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்காத மேக்னா, தற்போது ஜெயிலர் 2 படம் மூலம் கோலிவுட் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.