Famous Actress Joining Suriya 46 : சூர்யாவின் 46வது படத்தில் புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் யார் என்பது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Famous Actress Joining Suriya 46 : சூர்யாவின் 46வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். இந்த படத்தில் புதிதாக ஒரு நடிகை நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?
1/7கோலிவுட் திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் இந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
2/7சூர்யா இவ்வருடத்தில் கமிட் ஆன இன்னொரு படம், சூர்யா 46. இதனை, வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.
3/7சூர்யா நடித்திருக்கும் இன்னொரு படம், கருப்பு. இதனை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இதன் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
4/7சூர்யா, தற்போது தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில், சூர்யாவின் 46வது படத்தில் இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
5/7சூர்யா 46 படத்தில் புதிதாக ஒரு கேரக்டர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் ஒரு பெண் கதாப்பாத்திரம். அதில், 63 வயதாகும் பிரபல நடிகை ஒருவர் நடிக்கிறார்.
6/7அவர் வேறு யாருமில்லை, ராதிகா சரத்குமார்தான். பல படங்களில் தாய் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இவர், இதிலும் அப்படியே நடிப்பார் என்று கூறப்படுகிறது.
7/7ராதிகாவின் தாயார் கீதா, சமீபத்தில் உயிரிழந்தார். இதனால், சூர்யா 46 படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள சில நாட்கள் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.