Actress Rambha Unknown Facts : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்த ஒருவர், கிளாமராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இப்போது திரையுலகில் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actress Rambha Unknown Facts : சில நடிகைகள், தங்களது இளமை காலங்களில் பல படங்களில் நடித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை திரையுலகில் கொடிக்கட்டி பறந்து விட்டு பின்னர் திருமணம் ஆன பின்னர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவர். அப்படி, ஒரு காலத்தில் கிளாமராக நடித்த ஒருவர், தனது திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு 14 வருடங்கள் திரையுலகின் பக்கமே அடியெடுத்து வைக்கவில்லை. இப்போது மீண்டும் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
அந்த நடிகை வேறு யாருமில்லை, ரம்பாதான்! இவரை பார்த்தவுடன் இப்போது கூட பலர் “சார்..ரம்பா சார்..” என மெய்சிலிர்த்து கூறுவதுண்டு. தனது இளமை காலத்தில் ஹீரோயினாக நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார்.
ரம்பாவின் உண்மையான பெயர், விஜயலக்ஷ்மி. ஆந்திராவில் பிறந்த இவர், விஜயவாடாவில் படித்து வளர்ந்தார். இவர் தமிழில் ரம்பாவும் விஜய்யும், என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
ரம்பா, தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் அதிகம்.
ரம்பா, இந்தியில் சல்மான்கான், அனில் கபூர் உள்ளிட்டோருடனும் சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், நடிகை ரம்பா, தனது 33வது வயதில் இலங்கை தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
ரம்பாவிற்கு 3 பெண் பிள்ளைகள் 1 ஆண் பிள்ளை என 3 குழந்தைகள் உள்ளனர். இப்போது ரம்பா, தமிழ் ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார்.
கிட்டத்தட்ட 14 வருடங்களாக திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்காத ரம்பா, இப்போது ராபர் என்ற படம் மூலம் கம்-பேக் கொடுத்திருக்கிறார்.
ராபர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. அதில் ரம்பா குறித்து பேசிய தயாரிப்பாளர் தாணு, “ரம்பா 2000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. அவரது கணவர் பெரிய தொழிலதிபர். அவரது கணவர் என்னிடம் வந்து ரம்பாவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டார்” என குறிபிட்டு இருக்கிறார். இதையடுத்து, ரம்பாவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.