Actress Who Loved Kamal But Acted As Mother : பிரபல நடிகை ஒருவர், கமல்ஹாசனை ரொம்பவே காதலித்தார். ஆனால், அவருக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Who Loved Kamal But Acted As Mother : தமிழ் திரையுலகில் இருக்கும் எத்தனையோ பேர், ஒரே படத்தில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் சிலர் இடையிலேயே விவாகரத்து பெற்றுள்ளனர், ஒரு சிலர் நெடுங்காலம் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதில், சில கைக்கூடாத காதல்கள் கூட இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கமல் மற்றும் இன்னொரு பிரபல நடிகையுடையது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
1/7இந்திய திரையுலகில், முக்கிய நட்சத்திரமாக விளங்குபார் கமல்ஹாசன். 5 வயதில் திரையுலகிற்குள் நுழைந்த இவர், இப்போது நடிப்புத்துறைக்கே புது சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இவரது இளமைக்காலத்தில் இவருக்கு சில காதல் கதைகளும் இருந்துள்ளது.
2/7கமல்ஹாசன், தனது இளமைக்காலத்தில் காதலித்த அந்த நடிகையை, இப்போது வரை மறக்கவில்லை என்கிற பேச்சும் இருக்கிறது.
3/7இந்த உயிர் காதலி, தமிழ் நடிகை கிடையாது. மலையாளத்தில் இருந்து நடிக்க வந்தவர். இவர் கமலுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
4/7இருவரும், அபூர்வ ராகங்கள் படத்தில் முதலில் ஜோடியாக நடித்தனர். அதிலிருந்து இருவருக்கும் காதல் பிறந்தது. ஆனால், அந்த நடிகையின் தாய் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் இவர்களின் காதல் இணையவில்லை.
5/7அந்த நடிகை வேறு யாருமில்லை, ஸ்ரீதிவ்யாதான். ஸ்ரீவித்யா-கமல் இருவருமே தங்களின் காதல் குறித்து வெளியில் பேசியிருக்கின்றனர். கைக்கூடாத தங்களின் காதல் ஒரு பக்கம் இருந்தாலும், இருவரும் அவ்வப்போது ஒரே படத்தில் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
6/7இருவரும் பிரிந்த பிறகும், ஸ்ரீதிவ்யா கமலுக்கு ஒரு படத்தில் தாயாகவும், இன்னொரு படத்தில் மாமியாராகவும் நடித்திருக்கிறார்.
7/7ஸ்ரீதிவ்யா, கமலுக்கு தாயாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்துள்ளார், பின்னர் காதலா காதலா படத்தில் மாமியாராக நடித்தார். ஸ்ரீதிவ்யா, தனது மரண படுக்கையில் இருக்கும் போது கூட, கமலை கடைசியாக பார்க்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.