ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை! ஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல-வேறு யார்?

Famous Actress Rejected Rajinikanth Movie : பிரபல நடிகை ஒருவர், தன்னால் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாது என்று கூறி, அவருடனான பட வாய்ப்பை மறுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Famous Actress Rejected Rajinikanth Movie : இந்திய திரையுலகில், ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் இவர்தான் என்கிற பெயரை பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். இவர், சமீபத்தில் ஐஸ்வர்யா ராயை படையப்பா படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் ஆர்வமில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். ஐஸ்வர்யா ராயை போலவே, இன்னொரு நடிகையும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?

1 /7

ரஜினிகாந்த், தனது 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை சமீபத்தில் நிறைவு செய்தார். இதையொட்டி, அவரது ஹிட் படமான ‘படையப்பா’ மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இது குறித்த வீடியோவில் சமீபத்தில் பேசியிருந்தார்.

2 /7

படையப்பா படம் குறித்து பேசிய வீடியோவில், வில்லியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், அதில் அவர் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது ஐஸ்வர்யா போலவே ரஜினியை இதற்கு முன்னர் ரிஜெக்ட் செய்த ஒரு நடிகை குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

3 /7

1989ஆம் ஆண்டில், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ரஜினி படம், மாப்பிள்ளை. இது, ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமாகும். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்திருப்பார். மாமியாராக ஸ்ரீவித்யா நடித்திருப்பார்.

4 /7

ஸ்ரீவித்யாவின் இந்த மாமியார் கதாப்பாத்திரம், ஹீரோவுக்கு இணையான ரோல் ஆகும். இதில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்ரீவித்யா இல்லை. வேறு ஒரு பிரபல நடிகைதான்.

5 /7

பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான வைஜெயந்திமாலாவைதான் மாப்பிள்ளை படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறி வைஜெயந்திமாலா மறுத்துவிட்டார்.

6 /7

பணக்கார மாமியார் ரோலாக அந்த கதாப்பாத்திரம் இருக்கும். அதில் நடித்தால், படத்திற்காக ரஜினியுடன் சண்டை போட வேண்டும், திட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. அப்படியெல்லாம் தன்னால் ரஜினியை திட்ட முடியாது என்று கூறிய வைஜெயந்திமாலா, தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து விட்டாராம். 

7 /7

பின்னர் இதில் ஸ்ரீவித்யா நடித்து மாப்பிள்ளை படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த வாய்ப்பை தவற விட்ட வைஜெயந்திமாலாவால் பின்னர் ரஜினியுடன் எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது.