Famous Director Got Reading Illicit Book : பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர், சிறு வயதில் ஆபாச புத்தகம் படிக்கும் போது தனது தாயிடம் மாட்டிக்கொண்டதாக கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Famous Director Got Reading Illicit Book : இயக்குநர்கள் பலர், தங்களது வித்தியாசமான அனுபவங்களை ஏதேனும் பட விழாக்களில் பகிர்வதுண்டு. அப்படி, ஒரு இயக்குநர் தான் சிறு வயதில் ஆபாச புத்தகம் படிக்கும் போது தாயிடம் மாட்டிக்கொண்டதாக கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
1/7தமிழ் இயக்குநர்கள் பலர் இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட இயக்குநர்தான், தான் ஆபாச புத்தகம் படித்த போது தாயிடம் மாட்டியதாக கூறியிருக்கிறார்.
2/7அந்த இயக்குநர் வேறு யாருமில்லை, மிஷ்கின்தான். மனதில் பட்ட எதையும் வெளிப்படையாக பேசிவிடும் இவர், இதையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
3/7மிஷ்கின், தனது சிறு வயது அனுபவத்தை பகிர்ந்த போது இதை கூறினார். அவருக்கு 17 வயது இருக்கும் போது 3 ஆபாச புத்தகங்களை வாங்கி, அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்தாராம். அவரது தாய் மார்க்கெட் சென்று வந்த பிறகு அவர் ஆபாச புத்தகம் படிப்பதை கண்டுபிடித்து விட்டாராம்.
4/7மகன் ஆபாச புத்தகங்கள் படிப்பது தெரிந்ததும், அவர் அதனை எடுத்து மேஜை மீது வைத்திருக்கிறார். அப்போது, தன் தாயை கடவுளாக பார்த்ததாக மிஷ்கின் பேசினார்.
5/7பேட் கேர்ள் படத்தின் கதை குறித்து அவ்விழாவில் பேசிய மிஷ்கின், அந்த ஆபாச புத்தகம் படித்தது ஒரு பையனாக இல்லாமல் பெண்ணாக இருந்திருந்தால், ஒரு தாய் அவளை அப்படி வளர்க்க மாட்டாள், நாம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்று கூறினார்.
6/7மிஷ்கின், இப்படி வெளிப்படையக பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. எங்கு சென்றாலும் கண்ணாடி அணிந்து மேடையில் பேசும் மிஷ்கினின் பேச்சை கேட்க மட்டுமே அவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
7/7மிஷ்கின் இயக்கத்தில் பிசாசி 2 படமும், ட்ரைன் படமும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.