Famous Indian Actor Kabir Bedi Married For The 4th Time : பிரபல நடிகர் ஒருவர், தனது 70 வயதில், 4ஆம் முறையாக திருமணம் செய்திருக்கிறார். அதுவும், தன்னை விட 29 வயது இளையவரை..அந்த நடிகர் யார் தெரியுமா?
Famous Indian Actor Kabir Bedi Married For The 4th Time : திரை நட்சத்திரங்களை பொறுத்தவரை, அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதை கடந்த பின்புதான் திருமணம் செய்து செட்டில் ஆகின்றனர். இன்னும் சிலர், 40களை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால், இங்கு ஒரு நடிகர் தனது 70 வயதில், 4ஆம் முறையாக ஊரை கூட்டி திருமணம் செய்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
இந்த நடிகர், தனது திரை வாழ்க்கையில் அதிக படங்களில் வில்லனாக நடித்திருக்கிறாராம். இவரை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் அஞ்சுவார்களாம். ஆனால், நிஜ வாழ்க்கையிலிவர் ஒரு நல்ல நடிகர் என கூறப்படுகிறது.
அந்த நடிகரின் பெயர் கபீர் பேடி. 1960ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்த இவர், ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருடன் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.
கபீர், பல ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறார். ஆனால், இதுவரை அவர் இந்திய படங்களை விட அதிகமாக ஹாலிவுட் படங்களில்தான் நடித்திருக்கிறார். அதிலும் அவர் வில்லன்தான்.
கபீர் பேடி, முதல்ல் திருமணம் செய்து கொண்டது ஒரு ஒடிசி நடன கலைஞரைத்தான். அவரது பெயர் புரோதிமா பேடி. இவருக்கும் கபீருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்குள் செட் ஆகாததால் இந்த உறவு விவாகரத்தில் முடிந்தது.
கபீர், இரண்டாவதாக வெளிநாட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் சூசன். இதுவும் விவாகரத்தில் முடிந்தது. மூன்றாவதாக இவர் நிக்கி என்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் நிலைக்கவில்லை.
கபீர், 2016ஆம் ஆண்டு நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணின் பெயர் பர்வீன்.
கபீர், தற்போது பர்வீனுடன் மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.