ஆன்மீகத்தில் விழுந்த டாப் நாயகிகள்! லிஸ்டு பெருசா இருக்கே-இந்த நடிகை கூடவா?

Written ByYuvashreeUpdated byYuvashree
Published: Sep 16, 2025, 07:07 PM IST|Updated: Sep 16, 2025, 07:07 PM IST

Indian Actress Who Become Religious : சில இந்திய நடிகைகள், ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?

Tanushree Dutta 1/7

தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர், தனுஸ்ரீ தத்தா. இவர், சினிமாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தார். பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சில காலமாக ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். 

Ranjini2/7

90களில் பல ஹிட் படங்களில் நடித்தவர், ரஞ்சினி. இவர், ஒரு கட்டத்தில் கடவுள் பக்தியில் மூழ்கினார். இதனால் நித்யாநந்தா சர்ச்சையும் பெரிதாக வெடித்தது.

Mumtaj3/7

கவர்ச்சி நடிகையாக இருந்தவர், மும்தாஜ். குஷி, செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், இப்போது இஸ்லாமியத்தில் நாட்டம் அதிகம் பெற்று திரையுலகின் பக்கமே வராமல் இருக்கிறார்.

Sana Khan4/7

சிம்புவுடன், சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் சனா கான். இவரும் தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்துள்ளர். 2020ல் திருமணம் முடிந்த பிறகு, இவரும் ஆன்மீகத்தில் பெரிதாக இறங்கி விட்டார். இப்போது படங்களில் நடிப்பதே இல்லை. 

Saranya5/7

பேராண்மை படத்தில் அஜித்தா எனும் கேரக்டரில் வந்தவர், அஜித்தா. இவர், சில படங்களிலேயே நடித்துள்ளார். இப்போது பெரிய முருக பக்தையாக இருக்கிறார். இதற்கென்று தனியாக இன்ஸ்டாகிராம் மற்றும் Xல் ஒரு பக்கத்தையும் வைத்துள்ளார்.

பர்கா மதன்6/7

பர்கா மதன் என்கிற நடிகை, ஒரு காலத்தில் பெரிய நடிகையாக இருந்தார். 2012ல் அனைத்தையும் துறந்து புத்த மத கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். இது குறித்த புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

Nupur Alankar7/7

பாலிவுட் நடிகையான நுபூர் அலங்கார், 2022ல்தன் ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அதிலிருந்து படங்களில் நடிப்பதில்லை.