National Award Actor Driving Auto Now : சில நடிகர்கள், திரையுலகில் இருந்த வரை பல பிரபலமான கதாப்பாத்திரங்களில் நடித்து விட்டு, பின்பு மோசமான நிலைக்கு சென்று விடுவர். அப்படி ஒரு நடிகரின் நிலை மாறியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
National Award Actor Driving Auto Now : நடிகர்கள் பலர் திரையுலகில் இருக்கும் வரையில் பல நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பர். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு வரும் பட வாய்ப்புகள் குறைந்து போவதால் பின்னர் சினிமாவில் இருந்தே காணாமல் போய் விடுவர். அப்படிப்பட்ட ஒரு நடிகர் குற்றித்து இங்கு பார்ப்போம்.
ஒரு காலத்தில், இந்த நடிகரின் நடிப்பை பார்த்து இந்தியாவே வியந்தது. அவர் நடித்திருந்த படம், ஆஸ்கர் விருது வரை சென்றது. ஆனால், இப்போது அந்த நடிகர் இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கின்றார்.
19988ஆம் ஆண்டு வெளியாகி, பெரிய வெற்றி பெற்ற படம், சலாம் பாம்பே. இந்த இந்தி படத்தில் ஒரு சிறுவன் கதாப்பாத்திரம் வரும். அதில், ஷஃபீக் சையத் நடித்திருந்தார்.
சலாம் பாம்பே திரைப்படத்தில், இந்த சிறுவனின் கதாப்பாத்திரம்தான் முன்னணி கதாப்பாத்திரமாக இருக்கும். மும்பை தெருக்களில் வாழும் சிறுவனாக இவர் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரத்தின் பெயர், கிருஷ்ணா என்கிற சாய்பாவ். இந்த 12 வயது சிறுவன், இப்போது வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்டார்.
இவர், இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசிய விருதை பெற்றிருக்கிறார். அப்போது இவர் புகழின் உச்சத்தில் இருந்தார்.
ஷஃபீக்கிற்கு அந்த படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, 90களில் அவர் பெங்களூருவுக்கு திரும்பினார். சில சமயங்களீல் கன்னட தொலைக்காட்சி தொடர்களிள் கேமரா உதவியாளராக இருந்திருக்கிறார்.
ஷஃபீக், பின்னர் குடும்பஸ்தனாக மாறிவிட்டார். அதனால், திரையுலகம் மூலம் கிடைத்த வருமானம் போதவில்லை. எனவே, பிழைப்பை நடத்த ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்.
பெங்களூருக்கு அருகில் ஒரு சிறிய வீட்டில், மனைவி, நான்கு குழந்தைகளுடன் ஷஃபீக் வசித்து வருகிறார். சினிமா கனவுகள் தன்னை விட்டு போனாலும், அவர் தனது பொறுப்புகளை தவறாமல் செய்து வருகிறார்.