Famous Star Childhood Photo With MGR : பிரபல நடிகர் ஒருவர், தான் எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Famous Star Childhood Photo With MGR : எத்தனை தலைவர்கள் வந்தாலும், மக்களால் மறக்க முடியாத தலைவராக இருப்பவர், எம்.ஜி.ஆர். இவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் சென்றது. அப்போது, ஒரு பிரபல நடிகர் அவருடனான தனது இளம் வயது புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த நடிகர் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
மக்களின் தலைவனாக இன்றும் பலர் மனங்களை ஆட்சி செய்து வருபவர், எம்.ஜி.ஆர். முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான இவர் 1987ல் உயிரிழந்தார். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, பிரபல நடிகர் ஒருவர், சிறு வயதில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த நடிகர் யார் தெரியுமா?
இந்த நடிகர், 70களில் பிரபல ஹீரோவாக வலம் வந்த நடிகரின் மகன் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். கோலிவுட்டின் பெரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் இவர்.
சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் நடிப்பின் மூலமாகவே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது கோலிவுட்டில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த நடிகர், வாலிபன் ஆன பின்பு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவருக்கு படங்கள் கைக்கொடுக்கவில்லை என்றாலும் பின்னர் ஓரளவிற்கு ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்த பிரபல நடிகர், சிம்புவுடனும் நெருங்கிய நட்பு கொண்டவர். சிம்புவுக்கு அண்ணனாக கூட ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இவர் யார் என இப்போது கண்டுபிடித்திருப்பீர்களே..
அந்த நடிகர் வேறு யாருமில்லை, அருண் விஜய்தான். விஜயகுமாரின் மகனான இவர், முறை மாப்பிள்ளை படம் மூலம் திரைக்கு வந்தார். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். தொடர் தோல்விகளுக்கு பிறகு, இவருக்கு ஒரு படம் பெரிய ஏற்றத்தை கொடுத்தது. குற்றம் 23, தடம் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை தேடி தந்தன.
‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்த பின்பு, இவருக்கு தொடர்ந்து பல ஹிட் படங்கள் கைக்கு வந்தன. சமீபத்தில் ரெட்ட தல படமும் ஓரளவு வரவேற்பை பெற்றன.