Tamil Actor With Zero Flop Movies : ஒரு பிரபல தமிழ் ஹீரோ, தான் நடித்த அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கியிருக்கிறார். ரஜினி, கமல், விஜய் எல்லாம் கிடையாது. அந்த ஹீரோ யார் தெரியுமா?
Tamil Actor With Zero Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களில், யாருமே தோல்வி படங்கள் கொடுக்காதவர்களே இல்லை, அனைவருமே Flop படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு ஹீரோ மட்டும் தான் நடித்ததில் இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுத்தது கிடையாது. அந்த படங்கள் யாவும் சுமார் ரூ.100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
1/7தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களாக கருதப்படுபவர்கள், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டவர்கள். இவர்கள் திரையுலகிற்கு வந்தவுடன் பெரிய ஹிட் படம் எதையும் கொடுத்து விடவில்லை. அவர்கள் ஹிட் ஹீரோக்களாக ஆவதற்கு சில காலங்கள் பிடித்தது.
2/7திரையுலகிற்கு விரைவில் முழுக்கு போட இருக்கும் விஜய் கூட, தன் இளமை காலத்தில் மாஸ் ஹீரோ படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை. அஜித்திற்கும் அதே நிலைதான். இப்போது 3 வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக மாறிய நடிகருக்கு தான், ‘0 Flop நடிகர்’ என்கிற பட்டம் கிடைத்துள்ளது.
3/7இந்த ஹீரோ, இயக்குநராகத்தான் திரையுலகிற்குள் அறிமுகமானார். அந்த படம், பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு, அவர் நடித்த முதல் படமே ரூ.100 கோடி வசூலித்தது.
4/7அந்த நடிகர் வேறு யாருமில்லை, பிரதீப் ரங்கநாதன்தான். இவர் சமீபத்தில் ஹீரோவாக நடித்திருந்த முதல் படம், ட்யூட். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். இப்படம், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.
5/7இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே, ட்ராகன் படமும் வெளியானது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படமும் ரூ.100 கோடிக்கும் மேல் ஹிட் அடித்திருந்தது.
6/7பிரதீப், முதன் முதலாக நடித்த படம் லவ் டுடே. இந்த படம்தான் அவருக்கு ரூ.100 கோடி வசூலை கொடுத்த முதல் படமாகும். இது, அவரே நடித்து இயக்கிய படமாகும்.
7/7தன் முதல் மூன்று படங்களையும் ரூ.100 கோடி வசூல் கொடுத்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெயரை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன், இன்னும் பெரிய இடத்தை பெறுவார் என நம்பப்படுகிறது.