போதை பொருள் வழக்கு: அடுத்து சிக்கப்போகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Jul 02, 2025, 11:29 AM IST|Updated: Jul 02, 2025, 11:29 AM IST

Actress Going To Get Caught In Drug Case : சில நாட்களுக்கு போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த்-கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகையே உலுக்கியது. தற்போது அந்த வகையில், ஒரு பிரபல நடிகையும் போலீஸ் வலையில் சிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Actress Going To Get Caught In Drug Case : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் வழக்கில் சிக்கிய மக்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, இன்னும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனும் வகையில் போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பிரபல நடிகையின் பெயர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

போதை பொருள் வழக்கு1/7

போதை பொருள் வழக்கு

சென்னையில் பரவி வரும் போதை பொருள் பழக்கத்தை ஒடுக்க, போலீசார் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, இதில் தொடர்பு இருப்பதாக கூறாப்படும் சிலர், தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். 

ஸ்ரீகாந்த் கிருஷ்ணா கைது2/7

ஸ்ரீகாந்த் கிருஷ்ணா கைது

சில நாட்களுக்கு முன்னர், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் இந்த போதை பொருள் வழக்கில் சிக்கினர். இவர்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகளாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடையவர்3/7

தொடர்புடையவர்

இந்த போதை பொருள் வழக்கில், கிருஷ்ணா-ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக பிரதீப் மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சில முன்னணி தமிழ் நட்சத்திரங்களுக்கு போதை பொருள்களை சப்ளை செய்ததாக கூறியிருக்கின்றனர். 

சம்பந்தப்பட்ட பிரபலங்கள்4/7

சம்பந்தப்பட்ட பிரபலங்கள்

அந்த பிரபலங்களில் சிலர், நீண்ட காலமாக நடித்து வருபவர்களாக இருக்கின்றனர். இதில், குறிப்பாக ஒரு பிரபல நடிகையின் பெயரும் அடிபடுகிறது. 

நடிகை5/7

நடிகை

அந்த நடிகை, பல ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருபவராக இருக்கிறாராம். அது மட்டுமன்றி அவர் சென்னையில் வசித்து வருபவர் என்றும் கூறப்படுகிறது. 

சிக்குவாரா6/7

சிக்குவாரா

அந்த நடிகை, தற்போது போலீசாரின் கண்காணிப்பில் சிக்கியிருப்பதோடு அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை7/7

போலீசார் விசாரணை

போதை பொருட்களை விற்பனை செய்த பிரதீப் மற்றும் கெவின் ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் இன்னும் வாய் திறந்தால், மேலும் பல பிரபலங்கள் சிக்குவர் என்பது உறுதி.