Favourite Zodiac Signs of Lord Shani: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பகவானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒன்பது கிரகங்களில் இவர் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாகக் கருதப்படுகிறார். அனைத்து கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் இவர் உள்ளார். சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? இவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு நன்மை என்ன? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
1/10அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பெயர்ச்சி மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார்.
2/10சனி பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும் சமமான அன்பை பொழிகிறார். எனினும் ஜோதிட ரீதியாக சில ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
3/10ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் கிரகம். சனி சுக்கிரனின் நட்பு கிரகம். ஆகையால், ரிஷப ராசிக்காரர்கள் மீது சனி பகவானின் சிறப்பு அருள் காணப்படுகிறது. சனி பகவானின் அருள் அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ராசிக்காரர்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் போதெல்லாம், சனி பகவானின் அருளால், அதை எளிதாக சமாளித்து வெற்றி காண்கிறார்கள்.
4/10துலாம்: துலாம் ராசி சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். வேத ஜோதிடத்தின்படி, துலாம் ராசி சனி பகவானின் உச்ச ராசியாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பு ஆசிகளையும், அன்பையும் பெறுகிறார்கள். சனி பகவான் கடின உழைப்புக்குக் காரணணி கிரகமாக உள்ளார். துலாம் ராசிக்காரர்களும் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் ஒழுக்கத்தை நேசிப்பவர்கள். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சனி பகவானிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களிலும் சனி பகவான் இவர்களுக்கு நல்லதே செய்கிறார்.
5/10மகரம்: மகர ராசியின் அதிபதி சனி பகவான். அதாவது, இந்த ராசியை சனி பகவான் ஆட்சி செய்கிறார். ஆகையால், சனி பகவானின் சிறப்பு ஆசிகள் மகர ராசிக்காரர்கள் மீது நிச்சயமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வகையான சிரமங்கள் வந்தாலும், சனி பகவானின் ஆசிர்வாதத்தால், அவர்கள் பிரச்சினைகளை மிக எளிதாக சமாளிக்கிறார்கள். மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சனி பகவானின் அருளால் ஒருபோதும் பணப் பற்றாக்குறை இருக்காது. சனி பகவானின் சிறப்பு அருளால், அவர்களின் தன்னம்பிக்கை எப்போதும் அதிகரித்து இருக்கும்.
6/10கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கும் சனி பகவானின் சிறப்பு அருள் உள்ளது. சனி பகவானின் அருளால், அவர்கள் இயல்பிலேயே மிகவும் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். சனி பகவானின் அருளால், பல புதிய சாத்தியக்கூறுகள் வாழ்க்கையில் வருகின்றன. இவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் கடினமான சவால்களை தைரியமாக எதிர்கொள்கின்றனர். சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலத்தில் சனி பகவான் இவர்களை அதிகம் சோதிப்பதில்லை.
7/10மீனம்: மீன ராசிக்காரர்கள் எப்போதும் சனி பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறுகிறார்கள். மீன ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் இயல்பாகவே நேர்மையானவர்களாகவும், விவேகமுள்ளவர்களாகவும் இருப்பவர்கள். ஆகையால் சனி பகவான் இவர்களை எப்போது காக்கிறார். சனி பகவானின் அருள் அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வெற்றியையும் செழிப்பையும் தருகிறது.
8/10சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் அதிக பாதிப்பு இல்லாமல் இருக்கவும், சனி பகவானின் பரிபூரண அருளை பெறவும் சனி சாலிசா, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். இவை தவிர, ‘நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தையும் சொல்வது நல்லது.
9/10இவை தவிர ஏழை எளியவர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் உணவு, ஆடை, பணம், கம்பளி, மாணவர்களுக்கு கல்வி செலவுகள் என தானம் செய்யும் நபர்களையும் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களை காத்து ரட்சிப்பார் சனி பகவான்.
10/10பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.