போன ஏலத்தில் டம்மி... ஆனா இந்த ஏலத்தில் கில்லி... இந்த 5 பேருக்கு கோடிகள் குவியும்!

IPL 2026 Mini Auction: கடந்த மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாத இந்த 5 வீரர்கள், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் நிச்சயம் ஏலம் போக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

2026 மினி ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தால், தற்போது பல வீரர்களுக்கு வாய்ப்பு பிறந்துள்ளது. அந்த வகையில், இந்த 5 வீரர்களுக்கும் மினி ஏலத்தில் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.     


 

1 /8

ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. 10 அணிகளும் சேர்ந்து 31 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்களை எடுக்க வேண்டும். 

2 /8

இந்தச் சூழலில், ஆன்ட்ரே ரஸ்ஸல் ஓய்வை அறிவிக்க, பாப் டூ பிளேசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் மொயின் அலி ஆகியோர் மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால், கேம்ரூன் கிரீன், லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர் ஆகியோருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய வீரர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.  

3 /8

எனவே, கடந்த எந்த அணியாலும் வாங்கப்படாத இந்த 5 வீரர்கள், வரும் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். 

4 /8

பிருத்வி ஷா: இந்திய ஓபனிங் பேட்டருக்கான தேவை அதிகமுள்ளது. லக்னோ, டெல்லி, கேகேஆர் உள்ளிட்ட அணிகளுக்கு ஓபனிங் பேட்டர்கள் தேவை. பிருத்வி ஷா உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வருவதால் இவரை நிச்சயம் அணிகள் ஏலத்தில் எடுக்க முற்படும்.

5 /8

சிக்கந்தர் ராஸா: ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டரான இவர் கடந்த ஏலத்தில் யாராலும் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்தார். உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் தற்போது வெளிநாட்டு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கான தேவை இருப்பதால் இவரை நிச்சயம் ஏலத்தில் எடுக்க அணிகள் முயற்சிக்கும்.

6 /8

அகேல் ஹொசைன்: மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி டி20 லீக் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருபவர். இவர் மேல் சிஎஸ்கேவுக்கு ஒரு கண் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக பங்களிக்கக் கூடியவர். இடதுகை வீரர் வேறு. மேலும், பவர்பிளேவில் பந்துவீசக்கூடியவர் என்பதால் சிஎஸ்கே இவரை எடுக்க வாய்ப்புள்ளது. 

7 /8

மைக்கெல் பிரேஸ்வெல்: நியூசிலாந்து வீரரான இவரும் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் வரையில் சுழற்பந்துவீச்சில் கலக்கிய இவர் தற்போது பேட்டிங்கையும் மேம்படுத்தியிருக்கிறார். இதனால், இந்த மெகா ஏலத்தில் இவர் மீது பல அணிகளுக்கு ஒரு கண் இருக்கும், சிஎஸ்கே உள்பட...

8 /8

பதும் நிசங்க: சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கவனம் ஈர்த்தவர். அதிரடியான ஓபனிங்கிற்கு பெயர் பெற்றவர். ஓபனிங் வீரர்கள் தேவைப்படும் அணிகள் இவரை எடுக்க வாய்ப்புள்ளது.