ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைக்க நாம் தினமும் செய்யவேண்டிய 6 பழக்க வழக்கங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் என பல விஷயங்கள் செய்து வருகிறோம். ஆனால் அவை இல்லாமல் தினமும் சில எளிய பழக்கங்களை கடைபிடித்தாலே உடல் எடையை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தினமும் கடைபிடிக்கக்கூடிய பழக்கங்களை கொண்டு உடல் எடையை கண்டிப்பாக குறைக்க முடியும். அது குறித்தே இத்தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் பழுப்பு நிற கொழுப்புச் செயல்பாடு தூண்டப்பட்டு, நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் மன அழுத்தத்தை குறைக்கிறது. இவை சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் பயனுள்ள எடை இழப்புக்கு பங்களிக்கின்றன.
எடை குறைக்க ஆரோக்கியமான குடல் முக்கிய பாங்காற்றுகிறது. தயிர், கிம்ச்சி மற்றும் சார்க்ராட் போன்ற புளித்த உணவுகள் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. அதேபோல் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. சீரான குடல் நுண்ணுயிர் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதிசெய்து, பசியை குறைக்க உதவுகிறது. கிம்ச்சி உணவு என்பது புளித்த காய்கறிகளால் செய்யப்படும் ஒரு பாரம்பரிய கொரிய உணவு வகை ஆகும். இது முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோல், சார்க்ராட் என்பது புளித்த முட்டைக்கோஸ் என்று பொருள்படும். இது ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ப்ரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன.
தொடர்ந்து சாப்பிடுவதில் இருந்து உடலுக்கு சற்று ஓய்வு கொடுப்பது கொழுப்பை எரிக்க உதவுகிறது. விரதம் இருப்பது இன்சுலின் அளவை குறைத்து கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன் அதிகமாக சாப்பிடுவதை தடுகிறது.
வேகமாக சாப்பிடுவது தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொள்ள வழிவகுக்கிறது. உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும், கவனத்துடன் சாப்பிடுவதும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த பழக்கம் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.
ஒரு வேளை உணவுக்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த சூப் அல்லது ஸ்மூத்தியை குடிக்கலாம். இது கலோரி கட்டுக்குள் வைத்திருக்கும். அதே நேரத்தி தேவையான வைட்டமின்களையும் வழங்குகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் அல்லது குறைக்க நினைப்பவர்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
அதிக மன அழுத்தம் உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. அதேபோல் தேவையில்லாத உணவுகளையும் சாப்பிட தூண்டுகிறது. தியானம் அல்லது இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.