Healthy Ice Hack For Weight Loss: எடை இழப்புக்கு ஆரோக்கியமாக உதவும் ஐஸ் ஹேக் முறை உங்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க உதவும் ஒரு எளிய மற்றும் செயல்திறன் வாய்ந்த முறையாகும். இந்த ஐஸ் ஹேக் முறையை எவ்வாறு பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
Ice Hack Method: தற்போது மிகவும் பிரபலமாகி வரும் ஐஸ் ஹேக் முறை உடல் எடை இழப்புக்கு பெரிய பயனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. ஐஸ் ஹேக் முறை என்றால் என்ன? என்பதை பார்ப்பதற்கு முன், உங்கள் உடல் எடை இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐஸ் ஹேக் டயட் என்றால் என்ன?(What is the Ice Hack Diet?) ஐஸ் ஹேக் டயட் என்பது குளிர்ந்த நீர் அல்லது பிற குளிர்ந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக கலோரி செலவழிக்க செய்யும் ஒரு முறை.
எடை குறைக்கும் முறை?(Weight loss method?) குளிர்ந்த நீர் குடிக்கும்போது, உடல் அதை சூடாக்க அதிக எரிசக்தியை பயன்படுத்த வேண்டியதால், அதிக கலோரி எரிக்கிறது.
எடை குறைக்க உதவும் முக்கிய காரணம்? குளிர்ந்த நீர் குடிப்பதால் பசி குறைந்து, உடலின் கொழுப்பு எரிப்பு அதிகரிக்க செய்கிறது, இது எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
எந்த நேரத்தில் ஐஸ் நீர் குடிக்கலாம்?(When can you drink ice water?) காலையில் வெறும் வயிற்றில் அல்லது உடற்பயிற்சிக்கு பிறகு ஐஸான நீர் குடிப்பது அதிக உடலுக்கு நல்ல பயனளிக்கும்.
ஐஸ் கட்டியை சாப்பிடலாமா?(Can I eat an ice cube?) குறைந்த அளவில் ஐஸ்க்கட்டியை லேசான குளிர்ந்த பதத்தில் குடிப்பது உடல் சூடலை கட்டுப்படுத்த உதவும், ஆனால் அதிகமாக சாப்பிடுவது பல்லுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.
எந்த ஒரு விஷயம் தவறாமல் செய்ய வேண்டும்? குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் பயன்படுத்தினாலும், அளவாக பருக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான குளிரான உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
என்ன செய்யலாம்?(What can be done?) குளிர்ந்த நீரை பருகுதல் மட்டுமல்லாமல், சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். மேலும் நீங்கள் உங்கள் ஆரோக்கிய கடைப்பிடிப்பின் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.