LDL கொலஸ்ட்ராலை எகிற வைத்து... மரடைப்பை ஏற்படுத்தும்... சில உணவுகளும்... பழக்கங்களும்

Published: Apr 21, 2025, 10:41 AM IST|Updated: Apr 21, 2025, 10:41 AM IST

இன்றைய நவீன உலகில் மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது கவலை அளிக்கும் விஷயம். இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். 

Cholestrol1/9

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், கொலஸ்ட்ரால் பிரச்சனை பலருக்கு உள்ளது. உடலுக்கு கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அது வரம்பிற்கு மேல் அதிகரிக்கும் போது, ​​அது மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். 

Unhealthy Food Habit2/9

துரித உணவு, வறுத்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. பீட்சா, பர்கர்கள் அல்லது வறுத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் (LDL) அளவை அதிகரிக்கிறது.

Sweets3/9

இனிப்புக்கள், அதிக சர்க்கரை உள்ள கேக்குகள், பேஸ்ட்ரி வகைகள் ஆகியவற்றை உட்கொள்வது கொலஸ்ட்ராலையும் உடல் பருமனை உண்டாக்கும். இது  மாரடைப்பு இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால், அதனையும் அளவோடு உட்கொள்ள வேண்டும்.

Cooking Oil4/9

பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகள், எல்லாமே கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்ட, சுட்ட எண்ணெய் மிகவும் ஆபத்து. இதில் பொரித்த உணவுகள், LDL கொலஸ்ட்ராலை பெருமளவு அதிகரிக்கும். இதனால், மாரடைப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Salt5/9

உப்பு உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், அளவிற்கு அதிகமாக உப்பை உட்கொள்ளவது இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடுமற்றும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கத் தொடங்குகிறது. பிற்காலத்தில் அது உடல் பருமனாக மாறி, இதய நோய்கள், மாரடைப்பு, ஆகியவை ஏற்படத் காரணமாகிறது.

 

Laziness6/9

ஒரே இடத்தில்அமர்ந்து வேலை செய்யும் பழக்கமும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் கொழுப்பை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. உடற்பயிற்சி HDL என்னும் நல்ல கொழுப்பை அதிகரித்து LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. தினமும் உடல் பயிற்சி செய்ய முடியாவிடாலும், முடிந்த அளவு லிஃப்டை பயன்படுத்தாமல் இருப்பதும், குறைந்த தொலைவில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வதும் பலனளிக்கும்

Bad Habits7/9

புகைபிடித்தல் நல்ல கொழுப்பைக் குறைத்து இதய நரம்புகளைப் பாதிக்கிறது. அதிகப்படியான மது அருந்துதல் ட்ரைகிளிசரைடுகள், ஒரு வகை கொழுப்பையும் அதிகரிக்கிறது. இவை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கிறது.

Mental Stress8/9

நாள்பட்ட மன அழுத்த பிரச்சனை கார்டிசோல் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதயத்தை பாதிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் அல்லது பொழுதுபோக்குகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் ஆரோக்கியமற்ற உணவு அல்லது பிற கெட்ட பழக்கங்களை நாடுகிறார்கள்.

Disclaimer9/9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.