உணவுகளின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெற, அவற்றை சரியான முறையில் பக்குவமாக சமைப்பது அவசியம்.
உணவுகளை சரியான முறையில் சமைக்க வில்லை என்றால், அதன் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல், நன்மைகளை இழக்க நேரிடும். ஆயுர்வேதத்தில் உணவுகளை சரியாக தயாரிக்கும் முறைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.
சமைக்கும் போது சில உணவுகளை சரியாக பக்குவப்படுத்தி சமைப்பது அவசியம். ஏனெனில் சில உணவுகளில் உள்ள அமிலங்கள் மற்றும் கலவைகள், செரிமானத்தை தூண்டும் நொதிகளை சேதப்படுத்துகின்றன. அதோடு சில உணவுகளின் உள்ள பைடிக் அமிலம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.
குறிப்பிட்ட சில உணவுகளில், உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கும் கூறுகள் இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போவதோடு, செரிமானமும் பாதிக்கும். இதனை தடுக்க அவற்றை ஊற வைத்து சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பீன்ஸ் வகை பருப்புகளான கொண்டைக்கடலை, ராஜ்மா சோயா பீன் ஆகியவற்றில் உள்ள பைடிக் அமிலம் மற்றும் லெக்டின்கள் போன்ற கூறுகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. செரிமான அமைப்புக்கும் சேதத்தை விளைவிக்கும். இதனை தடுக்க இதனை எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றையும் சிறிது நேரம் ஊற வைத்து சமைப்பது நல்லது. இதில் உள்ள லெட்டின்களை வேகமாக உடைக்க இது உதவும். மணிக்கணக்கில் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறுதானியங்களை ஊறவைத்து சமைப்பதால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் நீங்கும். இது உடல் அத்தியாவசிய தாதுக்களை புரிஞ்சுவது தடுக்கும் அமிலம் இது. ஊற வைப்பதால் ஊட்டச்சத்தை முழுமையாக பெற முடியும் என்பதோடு, எளிதாக ஜீரணமும் ஆகும்.
பாதாம், வாதுமை, முந்திரி போன்ற உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஊற வைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள செரிமான நொதி தடுப்பான்கள் அகற்றப்பட்டு, அவை ஜீரணிக்க எளிதாகின்றன.
பூசணி, சியா மற்றும் சூரியகாந்தி விதைகள் அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் சாப்பிடுவதன் மூலம், அவற்றில் உள்ள நொதி தடுப்பான்கள் மற்றும் பைடிக் அமிலம் குறைகிறது, இதன் காரணமாக உடல் அவற்றை நன்றாகப் பயன்படுத்த முடியும்.
கீரை, காலே போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது, இது உடல் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். அவற்றைக் கழுவி, தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊறவைப்பதன் மூலம், ஆக்ஸாலிக் அமிலத்தின் படிகங்கள் குறைந்து, இந்தக் காய்கறிகள் அதிக நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.