மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த உணவுகளை டயட்டில் சேருங்க

Bone Health: எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

நமது உணவுப் பழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ள நிலையில், பால் தயிரை விட அதிக கால்சியம் கொண்ட சில சிறந்த உணவுகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1 /7

எலும்பு ஆரோக்கியம்: உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் எலும்புகள் வலுவாக இருந்தால், மூட்டு வலி முழங்கால் வலி முதுகு வலி இடுப்பு வலி, போன்ற எதுவும் இருக்காது. அதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் ஏதேனும் ஒன்றை மாற்றி மாற்றி தினமும் டயட்டில் சேர்ப்பது உதவும்.

2 /7

ராகி என்னும் கேழ்வரகு: ராகியில் காணப்படும் கால்சியம் உடலால் எளிதில் உறிஞ்சப்படும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் அதனை முளைகட்டி பயன்படுத்துவதால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முளைகட்டிய ராகி மாவு சந்தையில் எளிதாக கிடைக்கிறது.

3 /7

முருங்கை: முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை பருப்பு வகைகளுடன் சமைத்து சாப்பிடுவது, எலும்பு சார்ந்த பிரச்சினைகளை நீக்க பெரிதளவு உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இதில் கால்சியம் மட்டுமல்லாது இரும்புச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

4 /7

எள்ளு: எள் விதைகளில் கால்சியம் மட்டுமல்லாது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மெக்னீசியமும் நிறைந்துள்ளது. தினமும் எல்லை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதால், எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாகும்.

5 /7

பாதாம் பருப்பு: பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளிலும் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. அதிலும் இதனை ஊறவைத்து சாப்பிடுவதால், செரிமானம் எளிதாவதோடு, இதில் உள்ள ஊட்டச்சத்தின் பயன்களை முழுமையாக பெறலாம்.  

6 /7

மீன் உணவுகள்: சில மீன் வகைகளில் அதிக கால்சியம் உள்ளது. குறிப்பாக சால்மன் மத்தி போன்ற மீன் வகைகளில் மட்டுமல்லாது, உடல் கால்சியம் சத்தை உறிஞ்ச தேவையான வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது.

7 /7

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.