எகிறும் பிபியை அசால்டாக கட்டுப்படுத்தும்... சில சூப்பர் உணவுகள்

இன்றைய டென்ஷன் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக, உயர் ரத்த அழுத்த பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு.

 

அதிக ரத்த அழுத்தம், உடல் நிலையை கடுமையாக பாதிக்க கூடியது. மாரடைப்பு பக்கவாதம் போன்ற, ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்பதால், அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

 

1 /9

உயர் ரத்த அழுத்தமும் இதய நோய்களும் உயர் ரத்த அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். எனினும் இதை உணவு முறையின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

2 /9

சிட்ரஸ் பழங்கள்:  வைட்டமின் சி நிறைந்த, ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், எகிறும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

3 /9

கேரட்: பீட்டா கரோட்டின் நிறைந்தது கேரட்  என்பது அனைவருக்கும் தெரியும். இது கண் பார்வையை மேம்படுத்த அத்தியாவசியமான ஊட்டச்சத்து கேரட்டில் உள்ள காபிக் அமிலம் பினோலிக் கலவைகள் ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.

4 /9

மீன் உணவுகள்: ஒமேகா 3 என்னும் ஆரோக்கிய கொழுப்பு அமிலம், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்கள் அண்டாமல் பாதுகாக்க உதவும்.

5 /9

பூசணி விதை: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்துடன் பூசணி விதைகளில்  அர்ஜினைன் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, தேவையான இன்றியமையாத சத்துக்கள் ஆகும்.

6 /9

பயறு வகைகள்: உங்கள் மற்றும் பயறு வகைகள் பீன்ஸ் பருப்புகள் மற்றும் பயறு வகைகள், bp யை குறைக்கும் ஆற்றல் கொண்டவை. சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க உதவுகின்றன

7 /9

பெர்ரி பழங்கள்: அவுரி நெல்லி ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைகள், ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட அற்புத உணவுகள்.

8 /9

பிஸ்தா பருப்பு: பொதுவாகவே நட்ஸ் வகைகள் ஆரோக்கிய பண்புகள் நிறைந்தவை. அதிலும் பிஸ்தா பருப்பில், பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.