Fathima Babu Latest Photos : முன்னாள் செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும் இருப்பவர் பாத்திமா பாபு. இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fathima Babu Latest Photos : சில பிரபலமான தொலைக்காட்சிகளில், செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர், பல படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 80களில் பிறந்தவர்களின் கனவுக்கண்ணியாக இருந்த பாத்திமா, இப்போதும் பலருக்கும் பிடித்த செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள், மக்களை அதிர செய்துள்ளது. அவற்றை இங்கு பார்ப்போம்.
தமிழ் தொலைக்காட்சிகளில், பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. டிடி பொதிகை தொலைக்காட்சியில் 1980களில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்
டிடி பொதிகை தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு இவர் செய்தி வாசிப்பதை சில நாட்கள் நிறுத்தி விட்டு, பின்பு மீண்டும் தொலைக்காட்சியில் தோன்ரினார். இந்த இடைப்பட்ட காலத்தில், அவர் சித்திரப்பார்வை என்கிற தொலைக்காட்சி தொடரில் நடிக்க சென்றதாக தெரிவித்தார்.
பாத்திமா முதன் முதலில் நடித்தது, கல்கி என்கிற படத்தில்தான். இதில், அவர் ரேணுகா, ரஹ்மான், உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு துணை கதாப்பாத்திரங்களிலும் தற்போது வரை நடித்து வருகிறார்.
பாத்திமா, விஜய், சரத்குமார், பிரபுதேவா, அஜித் என பலரது படங்களில், தாயாக, அண்ணியாக, அத்தையாக நடித்துள்ளார்.சமீப காலமாக, பெரிதாக திரையுலகில் ஆக்டிவாக இல்லை என்றாலும், வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பாத்திமா, பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். பாத்திமா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனிலும் கலந்து கொண்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
பாத்திமா, வயதான போதிலும் எங்கு சென்றாலும் தனக்கு ஏற்றவாறு சரியாக மேக்-அப் போட்டுக்கொண்டு தன்னை சிறப்பாக காட்டிக்கொள்வார். இவரது ஸ்டைலை பலர் பின்தொடர்வதுண்டு. இந்த நிலையில், பாத்திமாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பாத்திமா இதில் தனது முடியை சுருள் செய்து கொண்டு, கலர் செய்து கொண்டு, புது ஸ்டைலில் இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர்.